02-26-2004, 02:01 AM
kuruvikal Wrote:BBC...உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதாக நீங்கள் நினைப்பதே தவறு....உங்கள் கருத்துக்களின் மீதான எமது கருத்துக்களே இங்கு வைக்கப்படுகிறது....! உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தும் அளவிற்கு நீங்களோ அல்லது நாங்களோ பெரிய விற்பன்னர்கள் அல்லர்....!
உண்மையில் இப்புத்தக்கத்தை முழுவதுமாக வாசிக்காமல் அதுதொடர்பில் எவரும் விமர்சனத்துக்குக் கூட விமர்சனம் எழுத முடியாது...காரணம்...எழுத்தாளருக்கு சார்பாகவும் அல்லது எதிராகவும் அதேவேளை எழுதப்பட்ட விடயங்களுக்குச் சார்பாகவும் அல்லது எதிராகவும் அல்லது நடுநிலையோடும் அல்லது நடுநிலை என்று தோற்றமளிக்கும் வகையிலும் விமர்சனம் வைக்கப்படலாம்...அதில் வியாபார தந்திரமும் அடங்கும்....!
ஈழத்து போராட்ட வரலாற்றில் சாதாரண மக்களாகிய எம்மால் நியாயத்தைக் காணக் கேட்க முடியாத பல செய்திகள் இந்த நூலில் அடக்கப்பட்டுள்ளது...அவற்றை எல்லாம் எப்படி எழுத்தாளரும் விமர்சகரும் நடுநிலையோடுதான் தந்தனர் எனத் தீர்மானிப்பது.....???!
நிச்சயமாக ஒன்று தெரிகிறது...இந்த முன்னாள் போராளி ஒரு இலட்சியத்துடன் போராடத்தொடங்கி திசைமாறிச் சென்று இருக்கின்றார் என்பதே...அதை விடுத்து இதில் சொல்லப்பட்ட அனைத்தும் எடுத்த எடுப்பில் சரி என்றோ தவரென்றோ ஏற்கப்பட முடியாதவையே.....!
குறிப்பாக "சிங்களவர்களை இனவெறியர்கள் என்று சொல்லும் எம்மவர்கள் மட்டும் என்ன"...இப்படி சொல்லி தொடர்ந்து செல்லும் அந்தப் பந்தியில் எழுத்தாளரோ விமர்சகரோ சிங்கள இனவெறியர் என்ற பதத்தை கொலை வெறியர்கள் என்று கையாண்டிருத்தலே அவ்விடத்துக்குப் பொருந்தும்....சிங்கள இனவெறி என்பது படுகொலை செய்வது மட்டுமானதல்ல...ஒரு இனத்தின் இருப்பையே அதன் அடையாளங்களையே அழிக்க முனைவதாகும்...அதற்கும் சில சமயங்களில் சிங்கள கிராமமக்கள் (திட்டமிட்ட குடியேற்றவாசிகள்...ஊர்காவல் படையினரின் குடும்பங்கள் அடங்களாக) அல்லது சில குண்டு வெடிப்புக்களில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதற்கும் (சில இடங்களில் இலக்கை அடைய மக்களின் இழப்பைத் தவிர்க்க முடியாததால்) எவ்வளவோ வேறுபாடு உண்டு....! இதை எல்லாம் கருத்தில் எடுத்து ஆழமாகவா கருத்துக்கள் அந்நூலில் பகரப்பட்டுள்ளன....????!
ஒன்று தெரியுமா பொய்ப்பிரச்சாரங்களின் போதும் சில உண்மைகளைக் காட்டி பிரச்சாரம் செய்யப்படும் அதைக்காட்டியே தமது பிரச்சாரம் முழுவதுமே உண்மை என்று காட்டி மக்களை ஏமாற்றுவது....இதைக்கூட அந்த நூலின் ஊடும் செய்ய முனைந்திருக்கலாம்......????! அப்படி இல்லாமல் உண்மையில் தனது தவறுணர்ந்து சிலவற்றைச் சொல்ல விரும்பியாவது எழுத்தாளர் இந்நூலை எழுதி இருக்கலாம்...அல்லது தாம் அறிக்கைகளாகவிட்டலோ..அல்லது செய்திகளாகவிட்டலோ...மக்கள் தம் கருத்தைப் புறக்கணிப்பர் என்பதால் நூல் வடிவில் விட்டு ஒரு நடுநிலை விமர்சனம் போன்ற விமர்சனத்தை வைத்து தமது கருத்துக்குப் பரப்புரையும் செய்யலாம்....இதில் நடந்ததென்ன.....???!
நூலை முற்றாக வாசித்தால் தான் தெரியும்...அதுவும் எமக்கு அங்கு கையாளப்பட்ட விடயங்கள் சிலவற்றினாவது உண்மைகள் தெரிந்திருந்தால் மட்டுமே நூலாசிரியரின் நோக்கமும் தேவையும் புரிந்து கொள்ளப்பட முடியும்.....!
எனவே இது தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை எல்லாம் அறிந்தவர்கள் போல் வைத்து வாசகர்களை ஏமாற்ற நாம் ஒரு போதும் தயாரில்லை...அல்லது மேலோட்டமாக பூசி மொழுகிய கருத்துகளை சிந்தவும் எமக்கு விருப்பமில்லை....! அதே வேளை உண்மையோ பொய்யோ ஒரு நூலை வெளியிட்டு தனது மனவோட்டங்களை வாசகர்களுக்கு காட்ட விரும்பிய ஒரு நூலாசிரியரை குறைத்து மதிப்பிடவும் விருப்பமில்லை.....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவி, சரி இந்த புத்தகத்தை விட்டிருங்க. அந்த விமர்சனத்துல நிறைய நியாயமான கேள்விகள் இருக்கு. அதுக்கு உங்க பதிலை சொல்லுங்க.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->