02-25-2004, 11:59 PM
புஸ்பராஜவின் புத்தகம் தவிர மற்றைய புத்தகங்களை பல்வேறு தேவைகளுக்காக வாசித்த வாசகனில் ஒருவனாக சில கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்...............
இந்த ஐந்து படைபுகளும் தனித்தனியே ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் ஒன்றை ஒன்று விளக்க முற்படுவதாகவும் இருப்பது தேச விடுதலை என அழைக்கப்படும் ஈழ போராட்டத்தின் அக நிலை யதார்த்தம்.
60களில் தமிழில் சிறுகதை உலுப்பிவிட்ட ஜெயகாந்தனின் அக்கினிப் பரீட்ஷை போல், 80களில் தமிழ் நவீனத்திற்கு புது வடிவம் தந்த சுந்தர ராமசாமியின் ஜெ ஜெ சில குறிப்புகள் போல் ஷோபா சக்தியின் கொரில்லா ஈழ போராட்டத்தினை ஒரு எக்ஸ்ரே கண்கொண்டு பார்ப்பதாகவே எனக்குப்படுகின்றது. கந்தபுராண கலாச்சாரம் தன்னது எனும் யாழ்பாண சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டு முகத்தை கொரில்லா அழகியல் குன்றாமல் ஒரு விஞ்ஞான பரிசோதனை செய்கின்றது.
களத்திலிருந்து புலத்திற்கு நீளும் கதைப்புலம் எமது மண்டைக்கபாளத்துக்குள் ஆயிரம் வாட் மின்சார விளக்கொன்றை பீச்சி அடிக்கின்றது. இந்த நாவல் எமது சமூகம் பற்றி விமர்சனம் மட்டுமல்ல சுயவிமர்சனமும் கூட.
இன்னொரு இரவில் தொடர்ந்து மற்றவை பற்றியும் சிலாகிப்பேன்....................

<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell