Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைரமுத்துவுக்கு ஒரு விருது...
#1
<b>சாகித்ய அகாடமி விருது பெற்றார் வைரமுத்து</b>

<img src='http://thatstamil.com/images20/cinema/vairamuthu-300.jpg' border='0' alt='user posted image'>

கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்காக நாடு முழுவதும் 22 மொழிகளில் இருந்து கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய பிரிவுகளில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் ஆனந்த விகடன் இதழில் வைரமுத்து தொடர்கதையாக எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

விருதுடன் நினைவுப் பரிசையையும், ரூ.50,000 ரொக்கப் பணத்தையும் சாகித்ய அகாடமி தலைவர் கோபிசந்த் நாரங் வைரமுத்துக்கு வழங்கினார்.

பின்னர் வைரமுத்து கூறுகையில், வட்டார மொழி வழக்கைப் பயன்படுத்தியதுதான் நாவலின் சிறப்பாகும். விருது வழங்கப்பட்டபோது, எனக்கு மாலை அணிவிக்கப்பட்டது. டெல்லிப் பூக்கள் என்னை அலங்கரித்தன. அப்போது நான் கள்ளிப்பூக்களைத்தான் நினைத்தேன். அந்தப் பூக்கள் இல்லாமல் இந்த டெல்லிப் பூக்கள் இல்லை.

இன்னொரு முறை இப்படி எழுத முடியுமா என்று கேட்கிறார்கள். இதுதான் என் நாவலுக்குக் கிடைத்த உண்மையான விருதாகும். இன்னொரு இதிகாசம் படைப்பதற்கான கரு கிடைத்துள்ளது. அது என்னவென்று இப்போது சொல்ல மாட்டேன் என்றார் வைரமுத்து.

கலைஞர் வாழ்த்து:

இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி முரசொலியில் வைரமுத்துவை வாழ்த்தி எழுதியுள்ளார். அவர் தனது வாழ்த்தில், நடந்த கதையை நடமாடும் தமிழில் நனைத்துக் கொடுத்துள்ள திறமையை நினைத்து இந்த விருது போதுமானதல்லவே என்ற மனக்குறையுடன் தம்பியை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-------------
thatstamil.com

<b>விருது பெற்ற கவிஞனுக்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வைரமுத்துவுக்கு ஒரு வ - by kuruvikal - 02-25-2004, 12:56 PM
[No subject] - by Paranee - 02-25-2004, 02:07 PM
[No subject] - by vasisutha - 02-26-2004, 04:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)