02-23-2004, 03:20 PM
kuruvikal Wrote:குறிப்பாக "சிங்களவர்களை இனவெறியர்கள் என்று சொல்லும் எம்மவர்கள் மட்டும் என்ன"...இப்படி சொல்லி தொடர்ந்து செல்லும் அந்தப் பந்தியில் எழுத்தாளரோ விமர்சகரோ சிங்கள இனவெறியர் என்ற பதத்தை கொலை வெறியர்கள் என்று கையாண்டிருத்தலே அவ்விடத்துக்குப் பொருந்தும்....சிங்கள இனவெறி என்பது படுகொலை செய்வது மட்டுமானதல்ல...ஒரு இனத்தின் இருப்பையே அதன் அடையாளங்களையே அழிக்க முனைவதாகும்...அதற்கும் சில சமயங்களில் சிங்கள கிராமமக்கள் (திட்டமிட்ட குடியேற்றவாசிகள்...ஊர்காவல் படையினரின் குடும்பங்கள் அடங்களாக) அல்லது சில குண்டு வெடிப்புக்களில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதற்கும் (சில இடங்களில் இலக்கை அடைய மக்களின் இழப்பைத் தவிர்க்க முடியாததால்) எவ்வளவோ வேறுபாடு உண்டு....! இதை எல்லாம் கருத்தில் எடுத்து ஆழமாகவா கருத்துக்கள் அந்நூலில் பகரப்பட்டுள்ளன....????!83..84..85 காலப்பகுதியில் வவுனியா.. மதவாச்சி.. அனுராதபுரம் பகுதிகளில் நடந்வற்றை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.. அவற்றை சிங்கள ஊடகங்களில் மீண்டும் மீண்டும் காட்டினால் நாடு எந்த நிலைக்குத் தள்ளப்படும்..?
எனவே இது தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை எல்லாம் அறிந்தவர்கள் போல் வைத்து வாசகர்களை ஏமாற்ற நாம் ஒரு போதும் தயாரில்லை...அல்லது மேலோட்டமாக பூசி மொழுகிய கருத்துகளை சிந்தவும் எமக்கு விருப்பமில்லை....! அதே வேளை உண்மையோ பொய்யோ ஒரு நூலை வெளியிட்டு தனது மனவோட்டங்களை வாசகர்களுக்கு காட்ட விரும்பிய ஒரு நூலாசிரியரை குறைத்து மதிப்பிடவும் விருப்பமில்லை.....!
சிங்களவர்கள் இனவாதப்போக்கை காட்டி கலகத்தை தூண்டி ஒரு இனத்தை அழிக்கவில்லை..
தாங்கள் செய்தவற்றை மறைத்து சிங்களவன் செயதவற்றை மட்டும் சொல்லி பிரச்சாரம்செய்து இனவாதத்தை தூண்டி ஒரு இனத்தையே அழித்துக்கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்..
உங்களது முதற்பந்தியில் குறிப்பிட்டபடி சிங்கள கொலை வெறியர்கள் என்பதில் சிங்கள என்பதை எடுத்து தமிழ் என மாற்றிப்பாருங்கள்.. மேலும் சிங்கள சொல்லுக்குப்பதில் தமிழ் என மாற்றி வாசித்துப்பாருங்கள். இவ்வளவுகாலமும் நடந்த அனார்த்தங்களக்கான சூத்திரதாரிகள் யாரென்று புரியும்..
எழுத சந்தர்ப்பந்தந்த குருவிகருக்கு நன்றி..
Truth 'll prevail

