02-22-2004, 07:05 PM
Ilango Wrote:BBC
உங்கள் கருத்துக்கள் சிலவற்றை வாசித்தபின்
இதை எழுதவேண்டும் என்று நினைத்தேன்.
உங்கள் கருத்தின் சரி தவறு உங்கள் பார்வையிலும் எனது பார்வையிலும் வேறுபடலாம்.
அது பற்றி நான் இங்கு கூறவரவில்லை.
ஒரு கருத்தை மிகவும் சுருக்கமாகவும் எல்லோரும் விளங்கிகொள்ளகூடியவகையில் எழுதுகிறீர்கள்.
கருத்து என்பது மற்றவர்களை திட்டுவதோ அல்லது சேறு பூசுவதோ அல்ல.
படிப்போரின் சிந்தனையை தூண்டுவதாக இருக்கவேண்டும். அந்தவகையில் உங்கள் கருத்துக்கள் என்னை கவர்ந்துள்ளன. ஆனால் இடைக்கிடை கொழும்புத்தமிழ் பேசுவதாக சொல்லி குறளிவித்தை காட்டுவதை குறைத்தால், உங்கள் கருத்துக்கள் ஆக்கபூர்வமாக இருக்கும்.
நகைச்சுவையென்பது தமிழை அரைகுறையாக கதைப்பதில்லை, வேறுவிதமாகவும் உங்கள் நகைச்சுவைஉணர்வை வெளிக்காட்டலாம்.
உங்க விமர்சனத்தை கவனத்தில் எடுக்கிறேன். நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

