02-22-2004, 03:05 PM
<b>குறுக்குவழிகள்-35</b>
<b>பத்திரத்தை பிரித்து ஒப்புநோக்குதல்</b>
நீங்கள் பல பந்திகளைக் கொண்ட நீண்ட ஒரு Word பத்திரத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். முதற்பந்தியையும் கடைசிப்பந்தியையும் ஒப்புநோக்கவேண்டியுள்ளது. இதற்காக முன்னும் பின்னும் பத்திரத்தை நகர்த்தி பார்ப்பது ஒரு சிரமமான வேலை. ஞாபகமறதி உள்ளவர்களுக்கு மேலும் இது கஷ்டமான காரியமாகும். பத்திரத்தின் அப்பந்திகளை அல்லது வேண்டிய ஏதாவது இரு பகுதிகளை ஒரே கண்பார்வைக்குள் வைத்துபார்க்கக்முடிந்தால் நன்றல்லவா? இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
பத்திரத்தை திறவுங்கள். மெனு பாரில் உள்ள "Window" என்ற மெனுவை கிளிக்பண்ணவும்.
பின்பு தோன்றும் பட்டியலில் காணப்படும் "split" என்ற கட்டளையை கிளிக்பண்ணவும். இப்போது நகர்த்தக்கூடிய ஒரு Horizontal Bar, pointer ன் நுனியில் ஒட்டிகொண்டிருக்கும். அதை சட்டம் இரு கூறாக பிரியக்கூடியதாக மத்தியில் நிலைநிறுத்தி கிளிக்பண்ணவும்.
இப்போது சட்டம் இருகூறாகி இரண்டிலும் ஒரே பத்திரம் Scroll Bar களுடன் காணப்படும். மேல் சட்டத்தில் பத்திரத்தின் முதல் பந்தியையும் கீழ் சட்டத்தில் பத்திரத்தின் கடைசிப்பந்தியையும் scroll பண்ணி எடுங்கள். ஒப்புநோக்குங்கள். வேலை முடிந்தபின்,
மீண்டும் மெனு பாரில் முன்போல "Window" வை கிளிக்பண்ணவும். பின் "Remove Split" என்பதை கிளிக்பண்ணவும். இப்போது பத்திரம் ஒரே பத்திரமாகிவிடும்.
இரு வெவ்வேறு பத்திரங்களையும் இதேபோல் நிலைப்படுத்தி பார்வையிடலாம்.
இரு பத்திரங்களையும் முழுமையாக திறந்துகொள்ளுங்கள். இரண்டாவதாக திறந்த பத்திரத்தின் மெனு பாரில் உள்ள மெனுவில் "Window" என்ற மெனுவை கிளிக்பண்ணி அதில் காணப்படும் "Arrange all" என்ற கட்டளையை கிளிக்பண்ணவும். பத்திரங்கள் இரண்டும் திரையில் முன்புபோல வெவ்வேறு Scroll Bar களுடன் காணப்படும். வேலைமுடிந்தபின் இரு பத்திரங்களையும் Close Button களை பாவித்து மூடிவிடவும்.
Also, please see page no. 6