06-26-2003, 12:52 PM
பொங்கு தமிழே வீறுடன் பொங்கு
புது வசந்தம் வீசப் புயலெனவே பொங்கு
இனிவரும் காலம் எமதென்றெ பொங்கு
எமது நிலம் எமக்கு வேண்டும் எனறே அலையெனவே பொங்கு
அவல வாழ்வு போதும் இனி
அந்தரித்த நாட்கள் கனவாய் மாறி
ஈழத்துத் தமிழர் வாழ்வு மேவ
சுதந்திரமாய் வாழ வழிகாட்ட
பொங்கு தமிழழே உணர்வுடனே பொங்கு
தரணி வாழ் தமிழரேல்லாம் வாழ்த்துக் கூறி நிற்க
ஈழத்துத் தமிழரேல்லாம் தோள் கொடுத்தே தாங்கி நிற்க
இனிதாகப் பொங்கு இன்பத் தமிழே
எம் உள்ளத்து உணர்வுகளை
தரணியெங்கும் எடுத்தியம்ப ஆர்ப்பரித்தே பொங்கு
உலகோரே! உம்மத்தரே!!
இனியேனும் உம் விழி திறவீரோ!!!
எம் மண்ணின் அவலம் கண்டு
இனியேனும் வழி விடுவீரோ!!
ஆணவம் பிடித்தாடும்
வல்லரசுக்களின் உளக் கதவு
இனியேனும் எமக்காய் திறக்க
உரத்துப் பறையறைந்து கூறு தமிழே
சிங்களத்துச் சகோதரனனே இனியாயினும்
"உன் மண்ணில் நீயும் என் மண்ணில் நானும்"
நிம்மதியாய் வாழ
நீ உன் வீட்டிற்குச் செல்
நாம் எம் வீட்டிற்குச் செல்ல
விரைந்தே முடிவெடுவென
முரசறைந்தே கூறு தமிழே
இனியெம் மண் உம் புதைகுழியாய்
மாறாதிருக்க வழியிதுதானேன
உறுதியுடன் ஆர்ப்பரித்தே கூறு தமிழே!
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
புது வசந்தம் வீசப் புயலெனவே பொங்கு
இனிவரும் காலம் எமதென்றெ பொங்கு
எமது நிலம் எமக்கு வேண்டும் எனறே அலையெனவே பொங்கு
அவல வாழ்வு போதும் இனி
அந்தரித்த நாட்கள் கனவாய் மாறி
ஈழத்துத் தமிழர் வாழ்வு மேவ
சுதந்திரமாய் வாழ வழிகாட்ட
பொங்கு தமிழழே உணர்வுடனே பொங்கு
தரணி வாழ் தமிழரேல்லாம் வாழ்த்துக் கூறி நிற்க
ஈழத்துத் தமிழரேல்லாம் தோள் கொடுத்தே தாங்கி நிற்க
இனிதாகப் பொங்கு இன்பத் தமிழே
எம் உள்ளத்து உணர்வுகளை
தரணியெங்கும் எடுத்தியம்ப ஆர்ப்பரித்தே பொங்கு
உலகோரே! உம்மத்தரே!!
இனியேனும் உம் விழி திறவீரோ!!!
எம் மண்ணின் அவலம் கண்டு
இனியேனும் வழி விடுவீரோ!!
ஆணவம் பிடித்தாடும்
வல்லரசுக்களின் உளக் கதவு
இனியேனும் எமக்காய் திறக்க
உரத்துப் பறையறைந்து கூறு தமிழே
சிங்களத்துச் சகோதரனனே இனியாயினும்
"உன் மண்ணில் நீயும் என் மண்ணில் நானும்"
நிம்மதியாய் வாழ
நீ உன் வீட்டிற்குச் செல்
நாம் எம் வீட்டிற்குச் செல்ல
விரைந்தே முடிவெடுவென
முரசறைந்தே கூறு தமிழே
இனியெம் மண் உம் புதைகுழியாய்
மாறாதிருக்க வழியிதுதானேன
உறுதியுடன் ஆர்ப்பரித்தே கூறு தமிழே!
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

