Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல்
#1
கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல்: 20 பேர் பலி
ஏப்ரல் 30, 2006

கொழும்பு:

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கருணாவின் முகாம்களின் மீது விடுதலைப் புலிகள் அதிரடி ரெய்ட் நடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.



இத் தகவலை விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகப் பிரிவின் தலைவர் பூலித் தேவன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் கருணாவுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் பாடமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருணாவின் முகாம்களை தீ வைத்து எரித்ததோடு, ராணுவம் அவர்களுக்கு வழங்கிய ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக பூலித் தேவன் கூறியுள்ளார்.

கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோது அருகில் இருந்த ராணுவ முகாமில் இருந்து விடுதலைப் புலிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு விடுதலைப் புலி காயமடைந்துள்ளார். அந்தத் தாக்குதலை ராணுவத்தினர் உடனே நிறுத்திக் கொண்டுவிட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கருணாவின் அணியைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் அந்த முகாம்களில் இருந்து தமிழ் மறுவாழ்வு மையத்துக்குச் சொந்தமான 2 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வாகனங்களில் இருந்த 7 சமூக நலத் தொடர்களை வாகனங்களோடு கருணா கும்பல் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத காட்டுப் பகுதியில் புலிகளுக்கும் கருணா தரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அப்படி ஏதும் தாக்குதல் நடக்கவில்லை. இந்தப் பகுதியில் கருணாவுக்கு முகாம்கள் கிடையாது என்றனர்.

ஆனால், ராணுவ பாதுகாப்போடு கருணாவின் முகாம்கள் செயல்பட்டு வருவதாக புலிகள் குற்றம் சாட்டியுள்ளதை நார்வேயும் உறுதிபடுத்தியுள்ளது


http://thatstamil.oneindia.in/news/2006/04...4/30/lanka.html
Reply


Messages In This Thread
கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் - by pepsi - 04-30-2006, 10:58 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)