Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் ப
#6
<b>பொலநறுவையில் துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் பலி </b>
[ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2006, 06:39 ஈழம்] [தாயக செய்தியாளர்]
பொலநறுவையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரது முகாம்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் தாக்கியழித்தனர். இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு-பொலநறுவை எல்லையில் வெலிக்கந்தைக்கு கிழக்கில் காசங்குளம் என்ற இடத்தில் இம்முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானுவின் கண்காணிப்பின் கீழ் இத்தாக்குதல் நடத்தப்பட்டு துணை இராணுவக் குழுவினரது முகாம்கள் அழிக்கப்பட்டன.

இம்முகாம்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினர் முகாம்கள் இருந்தபோதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதில் துணை இராணுவக் குழுவான ஈ.என்.டி.எல்.எஃப். முக்கிய உறுப்பினர்களும் மற்றொரு துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

தாக்குதல் சம்பவத்தில் காமயடைந்த ஒன்பது பேர் வெலிக்கந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் நடைபெற்ற போது முகாமை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அம் முகாமில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் இரு வாகனங்கள் இருந்துள்ளன.

தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே இன்று காலை 9 மணி முதல் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக வெலிக்கந்தை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து ரொய்ட்டருக்கு தொலைபேசியூடாக கருத்து தெரிவித்த விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன்,

எமது சிறப்பு விசேட அதிரடிப்படையணியினர் இத்தாக்குதலை நடத்தி மூன்று முகாம்களை அழித்தனர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலானது துணை இராணுவக் குழுவினருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் பாரிய பின்னடைவு என்று கூறினார்.

இத்தாக்குதல் சம்பவத்தை சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
http://www.eelampage.com/?cn=25881
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by வர்ணன் - 04-30-2006, 04:00 AM
[No subject] - by தூயவன் - 04-30-2006, 04:05 AM
[No subject] - by Sriramanan - 04-30-2006, 05:20 AM
[No subject] - by Sriramanan - 04-30-2006, 06:07 AM
[No subject] - by yarlmohan - 04-30-2006, 08:56 AM
[No subject] - by வன்னியன் - 04-30-2006, 09:51 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-30-2006, 09:52 AM
[No subject] - by kavithaa - 04-30-2006, 10:09 AM
[No subject] - by kavithaa - 04-30-2006, 10:15 AM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 11:56 AM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 12:06 PM
[No subject] - by iruvizhi - 04-30-2006, 12:56 PM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 01:28 PM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 01:30 PM
[No subject] - by தூயவன் - 04-30-2006, 01:38 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)