Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் ப
#5
<b>ஒட்டுபடையின் முகாம் தாக்கியழிப்பு - இருபது ஒட்டுப்படையினர் பலி - விடுதலைப் புலிகளின் கொமாண்டோக்கள் அதிரடி </b>
ளுயவரசனயலஇ 29 யுpசடை 2006
பொலநறுவை மாவட்டம், வெலிகந்தைப் பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கசன்குளம் பகுதியில் அமைந்திருந்த கருணா ஒட்டுப்படையின் முகாம் மீது இன்று அதிகாலை 12.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணி நடத்தி அதிரடித் தாக்குதலில் முகாம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. (மேலதிக விபரம் 2வது இணைப்பு)
மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு அவர்களின் நேரடி நெறிப்படுத் தலில் அதிகாலை 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதல் சுமார் ஒரு மணிநேரம் நீடித்துள்ளது.

இதன்போது அந்த முகாமிலிருந்த அனைத்து ஆயுதங்களும் விடுதலைப் புலிக் கொமாண்டோக்களால் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த அதிரடித் தாக்குதலில் ஒட்டுப்படையினர் தரப்பில் 20ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை படுகாயமடைந்த நிலையில் மேலும் 10பேர் பொலநறுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெற்றிகரத் தாக்குதலின்போது விடுதலைப் புலிகளின் கொமாண்டோ ஒருவர் காயமடைந்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கொமாண்டோக்கள் குறித்த முகாம் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தவேளை சிறீலங்கா படையினர் அவர்களை நோக்கி ஆட்டிலறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களுடன் கடத்தப்பட்ட அவர்களின் இரு வாகனங்களும் தாக்கியழிக்கப்பட்ட முகாமில் இருந்ததை விடுதலைப் புலிகளின் கொமாண்டோக்கள் அவதானித்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் குறித்து ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சிறீலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவிக்கையில்...

விடுதலைப் புலிகளிற்கும் கருணா குழுவிற்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் இராணுவம் சம்பந்தப்படவில்லையெனக் குறிப்பிடுள்ளார். வெலிகந்தைப் பகுதியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக மேலும் தெரிவித்தவர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியான இங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

http://eelatamil.net/sankathi/index.php?op...=2787&Itemid=26
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by வர்ணன் - 04-30-2006, 04:00 AM
[No subject] - by தூயவன் - 04-30-2006, 04:05 AM
[No subject] - by Sriramanan - 04-30-2006, 05:20 AM
[No subject] - by Sriramanan - 04-30-2006, 06:07 AM
[No subject] - by yarlmohan - 04-30-2006, 08:56 AM
[No subject] - by வன்னியன் - 04-30-2006, 09:51 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-30-2006, 09:52 AM
[No subject] - by kavithaa - 04-30-2006, 10:09 AM
[No subject] - by kavithaa - 04-30-2006, 10:15 AM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 11:56 AM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 12:06 PM
[No subject] - by iruvizhi - 04-30-2006, 12:56 PM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 01:28 PM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 01:30 PM
[No subject] - by தூயவன் - 04-30-2006, 01:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)