04-29-2006, 07:05 PM
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பெற்றோர்களே" என தனது அணியின் வழிநின்று தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார் சுஜீந்தன்.</b>
ஒரு பிள்ளையின் குழந்தைப் பருவத்தில் அதன் நடவடிக்கைகளில் பிறரை அல்லது பிறவற்றை விட பெற்றோரே அதிகமாய் ஆதிக்கம் செலுத்துகின்றனர் - அந்த அடித்தளம் தான் பிள்ளையின் எதிர்காலத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது என்கிற தனது மையக் கருத்தினை முன்வைத்து அதற்கு வலுவூட்ட சில உதாரணங்களையும் கூறிநின்றார். (--> "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" என்கிற பழமொழி நினைவுக்கு வருகிறது)
பிள்ளைகளின் குறை+நிறைகள் எல்லாமே பெற்றோரைச் சென்றடைகின்றன - பெற்றோரின் வளர்ப்பில் தான் இவை தங்கிநிற்கின்றன என்று தனது அணித் தலைவரின் கருத்துக்கு வலுச்சேர்த்தார். (-->அண்மையில் வந்த "திருட்டுப்பயலே" என்கிற தென்னிந்தியத் திரைப்படமும் இதே வகையான கருத்தை வெளிப்படுத்துகிறது)
புலம்பெயர் நாடுகளில் தமது பிள்ளைகள் தமிழர்களோடு பழகுவதை (சில) பெற்றோர்கள் விரும்புவதில்லை - வேற்றினத்தவரோடு பழகும்படி சொல்லிக்கொடுக்கிறார்கள் - அதனால் பலவிதமான கலாசார மாற்றங்கள், சீரழிவுகள் நிகழ்கின்றன - இதற்கு தொடக்கத்தில் பெற்றோரின் பிழையான வழிகாட்டலே காரணம் என்கிறார். (--> தமிழர்களோடு கூட்டுச் சேராதே என்று பெற்றோர்கள் எதற்கு சொல்கிறார்கள் என்கிற காரணத்தை மற்றைய அணியினர் தான் முன்வைக்கவேண்டும். --> தனிமனித சுதந்திரம் என்பது தவறானதா?, திருநீறு அணிதல் அவசியம் தானா?, வேற்று இனத்துப் பெண்ணை மணப்பது குற்றமா?, இவற்றுக்கும் பெற்றோர்-பிள்ளை-இடைவெளிக்கும் என்ன தொடர்புண்டு என்பதையும் மற்றைய அணியினர் விரிவாக அலசி காயப்போடுவார்கள் என நம்புகிறேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )
புலம்பெயர் பெற்றோர்க்கு பிறர் போல் வசதியாய் வாழ்வதில் அவா என்றொரு கருத்தை முன்வைத்துள்ளார். (--> புலம்பெயர்ந்த பெற்றோர்கள் கண்டன அறிக்கை விடப்போகிறார்கள். கவனம் சுஜீந்தன். -->உறவுக்கு, ஊருக்கு, நாட்டுக்கு கொடுக்க உழைப்பவர்கள் எத்தனைபேர். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ) பணம் தேடும் பெற்றோர் பிள்ளைகளின் தேவை அறிந்து அவர்களை அரவணைக்கத் தவறிவிடுகிறார்கள். பெற்றோரிடம் இடைவெளியை பிள்ளை உணர்கிறது - அதனை ஈடுகட்ட வேறு உறவுகளை நாடுகிறது - நாடுகிற உறவுகளால் தவறுகள் நேர்கிறது - என எடுத்துரைத்தார்.
தாய்மொழியால் என்ன பயனென தாய்மொழியை அந்நியப்படுத்தும் தாய் தந்தையரை - தாய்தந்தையால் என்ன பயனென முதியோர் இல்லத்தில் விலக்கி வைத்திருக்க ஒரு காலம் வருமென அழகாக கருத்துரைத்தார்.
கல்வி விடயத்திலோ அல்லது வேறு திறமை சார் விடயத்திலோ பிள்ளைகளை ஊக்குவிப்பதை விடுத்து - பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தாமே தாழ்த்திக் கதைப்பதுவும், பிறரோடு ஒப்பிட்டுக் கதைப்பதுவும் பிள்ளையை பெற்றோரிடமிருந்து விலகிநிற்கச் செய்கிறது என்றும் சொல்லிச்சென்றார்.
இறுதியாக சில கேள்விகளை முன்வைத்து - அதற்கு பதில் வைத்துவிட்டு அங்கால் நகருங்கள் - இல்லையெனில் ஓடிப் போங்கள் என்கிறார். (--> கவனம் பதில் கேள்வியுடன் வரப்போகிறார்கள். தயாராக இருங்கள்.).
தென்றலாய் வந்து போனார் சுஜீந்தன். தனக்குப் பின் புயல் வருமென எச்சரித்தும் சென்றார். புயலுக்கு முதல் சுடர் வரட்டும்.
<b>அந்தவகையில் அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் சூழலே" என்று வாதாட வந்திருக்கும் "சுடர்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். சுடர் விடும் கருத்துக்களைச் சுடச் சுடத் தாருங்கள்...</b>
ஒரு பிள்ளையின் குழந்தைப் பருவத்தில் அதன் நடவடிக்கைகளில் பிறரை அல்லது பிறவற்றை விட பெற்றோரே அதிகமாய் ஆதிக்கம் செலுத்துகின்றனர் - அந்த அடித்தளம் தான் பிள்ளையின் எதிர்காலத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது என்கிற தனது மையக் கருத்தினை முன்வைத்து அதற்கு வலுவூட்ட சில உதாரணங்களையும் கூறிநின்றார். (--> "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" என்கிற பழமொழி நினைவுக்கு வருகிறது)
பிள்ளைகளின் குறை+நிறைகள் எல்லாமே பெற்றோரைச் சென்றடைகின்றன - பெற்றோரின் வளர்ப்பில் தான் இவை தங்கிநிற்கின்றன என்று தனது அணித் தலைவரின் கருத்துக்கு வலுச்சேர்த்தார். (-->அண்மையில் வந்த "திருட்டுப்பயலே" என்கிற தென்னிந்தியத் திரைப்படமும் இதே வகையான கருத்தை வெளிப்படுத்துகிறது)
புலம்பெயர் நாடுகளில் தமது பிள்ளைகள் தமிழர்களோடு பழகுவதை (சில) பெற்றோர்கள் விரும்புவதில்லை - வேற்றினத்தவரோடு பழகும்படி சொல்லிக்கொடுக்கிறார்கள் - அதனால் பலவிதமான கலாசார மாற்றங்கள், சீரழிவுகள் நிகழ்கின்றன - இதற்கு தொடக்கத்தில் பெற்றோரின் பிழையான வழிகாட்டலே காரணம் என்கிறார். (--> தமிழர்களோடு கூட்டுச் சேராதே என்று பெற்றோர்கள் எதற்கு சொல்கிறார்கள் என்கிற காரணத்தை மற்றைய அணியினர் தான் முன்வைக்கவேண்டும். --> தனிமனித சுதந்திரம் என்பது தவறானதா?, திருநீறு அணிதல் அவசியம் தானா?, வேற்று இனத்துப் பெண்ணை மணப்பது குற்றமா?, இவற்றுக்கும் பெற்றோர்-பிள்ளை-இடைவெளிக்கும் என்ன தொடர்புண்டு என்பதையும் மற்றைய அணியினர் விரிவாக அலசி காயப்போடுவார்கள் என நம்புகிறேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )புலம்பெயர் பெற்றோர்க்கு பிறர் போல் வசதியாய் வாழ்வதில் அவா என்றொரு கருத்தை முன்வைத்துள்ளார். (--> புலம்பெயர்ந்த பெற்றோர்கள் கண்டன அறிக்கை விடப்போகிறார்கள். கவனம் சுஜீந்தன். -->உறவுக்கு, ஊருக்கு, நாட்டுக்கு கொடுக்க உழைப்பவர்கள் எத்தனைபேர். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ) பணம் தேடும் பெற்றோர் பிள்ளைகளின் தேவை அறிந்து அவர்களை அரவணைக்கத் தவறிவிடுகிறார்கள். பெற்றோரிடம் இடைவெளியை பிள்ளை உணர்கிறது - அதனை ஈடுகட்ட வேறு உறவுகளை நாடுகிறது - நாடுகிற உறவுகளால் தவறுகள் நேர்கிறது - என எடுத்துரைத்தார்.தாய்மொழியால் என்ன பயனென தாய்மொழியை அந்நியப்படுத்தும் தாய் தந்தையரை - தாய்தந்தையால் என்ன பயனென முதியோர் இல்லத்தில் விலக்கி வைத்திருக்க ஒரு காலம் வருமென அழகாக கருத்துரைத்தார்.