Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயதேவனின் நேர்மை!
#1
லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது.

இந்த செய்தி லண்டனில் வாழும் சில நண்பர்களால் சில நாட்களக்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை இணையத்தளத்தில் பிரசுரித்து ஜெயதேவனின் இந்த செய்கையை கண்டிக்கும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த செய்தியும் என்னுடைய தளத்தில் வராததால் அவர்கள் சிறிது குழப்பம் அடைந்திருப்பார்கள்.

இந்த விடயத்தில் ஜெயதேவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? மற்ற விடயங்களில் எப்படியோ, ஈழபதீஸ்வரன் ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்ததிலும், அதை வைத்து அவர் மக்களை ஏமாற்றுவதிலும் அவர் நேர்மையாகவே நடந்து கொண்டிருக்கிறார்.

ஆலயம் என்பது ஒரு மக்களின் மூட நம்பிக்கைகளை மூலதனமாக்கும் ஒரு வர்த்தக நிறுவனம். அந்த வகையில் ஜெயதேவன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்து வைத்திருப்பது எந்த விதத்திலும் தவறல்ல. பகுத்தறிவாளர்கள் செய்யும் பிரச்சாரத்தை அவர் சட்டரீதியாக செய்திருக்கிறார். அத்துடன் கோயில் என்கின்ற கம்பனியை உருவாக்குவதன் காரணமே மக்களை ஏமாற்றி, அவர்களின் அறிவை மழுங்கடித்து, மூட நம்பிக்கைகளை விற்பனை செய்து அதன் மூலம் பணம் ஈட்டுவதற்காகத்தான். ஆகவே ஒரு கோயிலை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றாது விட்டால்தான் தவறு. அந்த வகையில் கோயிலை வைத்திருக்கின்ற ஒருவரை மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினால், உண்மையில் அது ஒரு பெரும் முரண்பாடு ஆகும்.

கோயில் என்பது பொதுச் சொத்து அல்ல. எந்த ஒரு கோயிலும் பொதுச் சொத்தாக இருந்ததும் இல்லை. ஆகக் குறைந்தது எல்லோருக்கும் நன்மை பயக்கின்ற ஒன்றாகக் கூட இருந்ததில்லை. கோயில் என்கின்ற கம்பனி மூலம் நன்மை அடைகின்றவர்கள் தனியார்களே. ஒரு போதும் பொதுமக்கள் அல்ல. ஆகவே கோயில் என்பது தனியார் சொத்துத்தான். இவ்வாறு எல்லாம் சிந்திக்கையில், இந்த விடயங்களையும் சரியாகச் செய்து வருகின்ற ஜெயதேவனை பாராட்டவும் தோன்றுகிறது. வாழ்க ஜெயதேவனின் பகுத்தறிவுச் சிந்தனை.

ஆனால் இந்த ஈழபதீஸ்வரன் கம்பனியை உருவாக்கியதன் நோக்கம், ஈழத்தில் பசித்திருக்கும் வயிறுகளுக்கு உணவு கொடுக்கத்தான் என்பதை மறந்து, ஜெயதேவன் தன்னுடைய வயிற்றை வளர்த்து வருவதுதான் பெரும் தவறு. யாரிடம் ஒப்படைத்தால் இந்த கம்பனியின் வருவாய் ஈழ மக்களிடம் போய்ச் சேருமோ, அவர்களிடம் ஒப்படைப்பதுதான் சரியான செயலாக இருக்கும்.

ஆனால் ஜெயதேவன் தமிழீழத்தையும், தமிழீழ மக்களையும மறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்பொழுது அவர் செய்கின்ற "வேலையால்" வருகின்ற வருமானமும், ஈழபதீஸ்வரன் கம்பனியில் எங்களின் இளிச்சவாய்த் தமிழர்கள் கொட்டுகின்ற பணமும் ஜெயதேவனின் கண்களை மறைக்கும் வரை, அவர் இந்த கம்பனியை மீண்டும் தமிழீழத்திற்காக ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. சட்டரீதியாகவும் இந்தக் கம்பனியை பெறமுடியாது என்றே நினைக்கிறேன். அதனாலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலம் சிலர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஆர்ப்பட்டங்களால் ஜெயதேவனின் மனதை மாற்ற முடியாத அளவிற்கு, அவரது தற்போதைய வருமானம் பெரிதாக இருக்கின்றது.

இதில் இன்னும் ஒன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜெயதேவனின் பின்னணி ஏறக்குறைய அம்பலப்படத்தப்பட்டு விட்ட ஒன்று. ஆனால் அதன் பிறகும் ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு சென்று, ஜெயதேவனுக்கு வருவாய் தேடிக் கொடுக்கும் எம் மக்களை என்னவென்று சொல்வது? அவர்களை யார் கண்டிப்பது? என்னைக் கேட்டால் ஜெயதேவனை விட ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு செல்லும் மக்களே குற்றவாளிகள் என்பேன்.

ஆகவே எமது மக்களை விழிப்படைய வைக்கும் வழியைப் பார்ப்போம். கோயில்களில் வீணாகக் கொட்டுகின்ற பணத்தை, தமிழீழத்திற்கு கொடுக்கும் அறிவை உருவாக்குவோம். இதுவே ஜெயதேவன் என்கின்ற தனியார் பணம் ஈட்டுவதை தடுப்பதற்கும், ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு போகின்ற பணத்தை தமிழீழ மக்கள் பெறுவதற்கும் சரியான வழியாக இருக்கும். பரப்புரைகள் மூலம் எமது மக்கள் திருந்தவில்லை என்றால், ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு போட்டியாக இன்னுமொரு கம்பனியை திறந்து, கட்டுக் கதைகள் மூலம் விளம்பரம் செய்து, பக்தகோடிகளை புதிய கம்பனிக்கு வரச் செய்ய வேண்டியதுதான். தற்போதைக்கு இதை விட வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை.


-வி.சபேசன் (27.04.06)

http://www.webeelam.com/
Reply


Messages In This Thread
ஜெயதேவனின் நேர்மை! - by ஜெயதேவன் - 04-27-2006, 10:32 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 10:38 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-28-2006, 09:40 AM
[No subject] - by Ilayathambi - 04-28-2006, 07:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)