Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் உல்ப் ஹென்றிக்சன் - படங்கள்
#2
மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்காப் முப்படையினரும் தாக்குதல் நடத்தியபோது கண்காணிப்புக்குழு என்ன செய்துகொண்டிருந்தது.- எழிலன்

எமது நிர்வாகப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்காப் முப்படையினரும் 16மணித்தியாலயங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தியபோது இலங்கைப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழு இத் தாக்குதலை தடுக்க ஏன் முயலவில்லை என திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் உல்ப் ஹென்றிசனிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று (27.04.2006) திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளருக்கும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு சம்பூரில் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போதே சி.எழிலன் கண்காணிப்புக்குழுத் தலைவரிடம் சிறலங்கா முப்படையினரின் தாக்குதலை ஏன் தடுக்க முயலவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.

இக் கேள்விக்கு பதிலளித்த இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர் இத் தாக்குதல்கள் கொழும்பு இராணுவத் தலைமையகத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட சிறிலங்காப் படைகளின் தளபதிகள் தமக்குத் தெரிவித்ததாக போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழுத் தலைவர் எழிலனிடம் தொவித்தார்.

சந்திப்பின் நிறைவில் சம்பூர், கடற்கரைச் சேனை, சேனையூர், இலக்கந்தை, கூனித்தீவு குடியிருப்புகள் மீது நடத்திய தாக்குதல்களினால் ஏற்பட்ட அழிவுகள் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவருக்கு நேரடியாக காண்பிக்கப்பட்டது

சிறிலங்கா முப்படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மக்கள்இத் தாக்குதலின் போது 15மேற்பட்ட மக்கள் உயிரிழந்தது பலர் காயமடைந்துள்ளது, பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தமை பற்றியும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மக்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல்களினால் மக்கள் தமது பாதுகாப்புக்காக போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை என்பதையும் எழிலன் சுட்டிக்காட்டினர்.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
Reply


Messages In This Thread
[No subject] - by yarlmohan - 04-27-2006, 10:36 AM
[No subject] - by அகிலன் - 04-27-2006, 11:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)