04-26-2006, 01:23 PM
நல்ல கேள்வி. நேற்றுக் உள்ளூர் பிபிசி செய்தி அறிக்கையில் இலங்கை சம்பந்தமாக காட்டப்பட்ட ஒளிப்படங்களில் ,திருகோணமலையில் கொல்லப் பட்ட சிங்கள விவசாயிகளின் மரணவீடும், விடுதலைப் புலிகளின் தற்கொடைதாரிகளின் அணிவகுப்பும்(இது முன்னர் எடுக்கப்பட்ட
படம்,முகத்தை மூடிய அணிவகுப்பு) காட்டப் பட்டது.
தமிழ் மக்கள் மேல் நிகழ்த்தப்பட வன்முறைகள் பற்றி எதுவித செய்தியும் இல்லை.தமிழ் ஊடகங்களில் கூட ஒரு படமும் கிடையாது.எமது ஊடகங்களில் கூட இல்லா விட்டால் மற்றய செய்தியாளர்கள் இவற்றை எங்கிருந்து பெறுவார்கள்.இவ்வாறான படங்களே மேற்குலகில் பொதுமக்களிடயே செய்திகள் பற்றிய அபிப்ராயத்தை ஏற்படுதுகின்றன.ஈற்றில் அரசியல்வாதிகளின் முடிவுகளுக்கும் இவை உளவியல் ரீதியில் தாக்கம் செலுத்துகின்றன.மிகவும் குறைந்த விலையில் டிஜிடல் கமராக்களை வாங்க முடியும்.பரந்து பட்ட ரீதியில் இவற்றை நிலை பெறச் செய்தால் எல்லா இடங்களிலும் படங்களை உடனடியாகவே எடுக்க முடியும் அல்லவா? மக்களின் அவலமே மேற்குலகில் தாக்கத்தைச் செலுத்தும்.இதனை வெகு லாவகமாக தற்போது சிங்கள அரசாங்கம் செய்கிறது.தமிழ் நெற்றில் இருந்தே இப்போது அனேகமான தமிழர் தரப்புச் செய்திகளை,மேற்குலக செய்தி நிறுவனங்கள் எடுகின்றன.ஆகவே தமிழ் நெற்றை நடதுபவர்கள் தங்கள் பிராந்திய செய்தியாளர்களுக்கு டிஜிடல் கமராக்களை கொடுத்து படங்கள இணயத் தளத்தில் போட்டால் இதனைச் ஓரளவு சரி செய்ய முடியும் என்று நினக்கிறேன்.