Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை தமிழ் காங்கிரசின் செந்தில்நாதன் சுட்டுப் படுகொலை
#1
இலங்கை தமிழ் காங்கிரசின் செந்தில்நாதன் சுட்டுப் படுகொலை
[]
வவுனியா அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மூத்த உறுப்பினரும் வர்த்தகருமான செந்தில்நாதன் இன்று புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.


சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் இன்று முற்பகல் 11 மனியளவில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

வவுனியாவில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக அவர் போட்டியிடவிருந்தார்.

சம்பவ இடத்துக்கு சிறிலங்கா காவல்துறையினர் உடனே செல்லவில்லை. இருப்பினும் படுகொலை நடந்த இடத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.

இதனிடையே ஓமந்தை சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் எஸ்கே.ரவீந்திரன் (வயது 36) என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து தாண்டிக்குளம் நிலையைத் தாண்டி ஏ-9 வீதியில் போக்குவரவுகள் முடக்கப்பட்டன.


http://www.eelampage.com/?cn=25784
Reply


Messages In This Thread
இலங்கை தமிழ் காங்கிரசின் செந்தில்நாதன் சுட்டுப் படுகொலை - by adsharan - 04-26-2006, 08:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)