Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Sri Lankan Kfir jets bomb LTTE controlled area in Trincomale
#11
[size=20]போர்ப் பிரகடனம் செய்துள்ளதா சிறிலங்கா அரசாங்கம்: கண்காணிப்புக் குழுவிடம் எழிலன் கேள்வி

சிறிலங்கா அரசாங்கம் போர்ப் பிரகடனம் வெளியிட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்துமாறு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரை தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கேட்டுக்கொண்டுள்ளார்.


மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிறிலங்காவின் முப்படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது தொடர்ச்சியான தாக்குதலை நடத்தின.

இது தொடர்பில் கண்காணிப்புக் குழுவிடம் நேற்று இரவு முறைப்பாடு செய்த எழிலன், சிறிலங்கா அரசாங்கம் போர்ப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மூதூர் கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தால் 150-க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் எழிலன் கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவித்தார்.

"நாங்கள் அரச படைகளுக்கு எதிராக ஒரு துப்பாக்கிச் சூடுகூட நடத்தவில்லை. சிறிலங்கா முப்படையினர் தாக்குதல் பாரிய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு அளவிலான யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் தொடங்கியுள்ளதாக என்பதை எமக்கு கண்காணிப்புக் குழுவினர் விளக்க வேண்டும்" என்று எழிலன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா முப்படையினரின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் உடைமை சேதங்கள் குறித்து கணக்கிடப்பட்டு வருவதாகவும் எழிலன் தெரிவித்துள்ளார்.

மூதூர் கிழக்கின் 6 கிராமங்களில் சிறிலங்கா விமானப் படையின் கீபிர் ஜெட் விமானங்கள் குண்டு வீச்சுத் தாகுதலை நடத்தியுள்ளன.

சிறிலங்கா கடற்படையினர் மீதான புலிகளின் தாக்குதலுக்குப் பதில் நடவடிக்கையே இத்தாக்குதல் என்று இராணுவத் தரப்பில் கூறப்படுவதை எழிலன் மறுத்துள்ளார்.

சிறிலங்காவின் முப்படைத் தாக்குதலில் சேனையூர் மத்திய கல்லூரி அறிவியல் ஆய்வகம் மற்றும் முன்பள்ளி ஆகியவை நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

கட்டைப்பறிச்சான், சேனையூர், கூனித்தீவு, சூட்டைக்குடா மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய விடுதலைப் புலிகளின் நிர்வாக கிராமங்களின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

முப்படைகளின் தாக்குதலைத் தொடர்ந்து நேற்று இரவு மூதூர் கிழக்கு கிராமங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.

நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கிய முப்படைத் தாக்குதல் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்துள்ளது.

மக்கள் பாதுகாப்புக்காக பாடசாலைகளில் பதுங்கினர்.

சிறிலங்கா முப்படைகளின் தாக்குதல்கள் இரவு 10 மணியளவில் நிறுத்தப்பட்டன.

-புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:07 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:17 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:24 PM
[No subject] - by இராவணன் - 04-25-2006, 02:24 PM
[No subject] - by kurukaalapoovan - 04-25-2006, 04:18 PM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 12:12 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 12:19 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 12:34 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 01:26 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 02:00 AM
[No subject] - by Mathan - 04-26-2006, 05:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)