Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Sri Lankan Kfir jets bomb LTTE controlled area in Trincomale
#10
மட்டுப்படுத்தப்பட்ட போர்????



இன்று கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பென்சகோ படுகாயங்களுக்கு உள்ளானார். மேலும் ஒரு உயர் அதிகாரி உட்பட 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர். படுகாயங்களுக்கு உள்ளான சரத்பென்சகோவிற்கான சத்திர சிகிச்சைகள் முடிவடைந்து தற்பொழுது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியதாக குற்றம் சாட்டிய சிறிலங்கா அரசு திருகோணமலையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது விமானத் தாக்குதலையும் எறிகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது. கடலில் இருந்தும் சிறிலங்கா கடற்படையின் டோரப் படகுகள் பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

தாம் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக சிறிலங்காவின் சமாதானச் செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்றைய சம்பவத்தை அடுத்து சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆயினும் தாம் முற்றுமுழுதான யுத்தத்திற்கு போகவில்லை என்றும் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் விடுதலைப் புலிகளே முதலில் திருகோணமலை கடற்படைத் தளம் மீது ஏறிகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கண்காணிப்புக் குழுத் தலைவர் இது ஒரு உண்மையான யுத்தமாக மாறிவிடாது என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி திருகோணமலையில் தொடரும் இராணுவத் தாக்குதல்களை "கொழும்பில் நடந்த தாக்குதலின் எதிர்வினை" என்று கருத்து தெரிவித்து மறைமுகமாக நியாயப்படுத்தியும் உள்ளார். மேற்குலக நாடுகளும் திருகோணமலையில் நடக்கும் தாக்குதல்களை கண்டிக்காது இருக்கின்றன. சிறிலங்காவின் சமாதானச் செயலகத்தின் பேச்சாளரின் கூற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரின் கூற்றும் ஏறக்குறைய ஓரே மாதிரியே உள்ளன.

இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை எனும் இவர்களின் கூற்றுக்கள் பாலஸ்தீனத்தில் நடப்பதை ஞாபகப்படுத்துகின்றன. பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் இஸ்ரேலில் குண்டுத் தாக்குதலை நடத்தினால், இஸ்ரேல் விமானங்கள் பாலஸ்தீனம் மீது விமானத் தாக்குதலை நடத்தும். ஓரிரு நாட்களில் இது முடிவுறும். பின்பு சில காலம் கழித்து பேசுவார்கள். பின்பு மீண்டும் குண்டுத் தாக்குதல், பதிலுக்கு விமானத் தாக்குதல், பின்பு பேச்சு. இதுதான் அங்கு பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஈழத்தில் சமாதன முயற்சிகள் தொற்றுப் போன நிலையில் பாலஸ்தீனம் போன்று ஈழத்திலும் "யுத்தமும் யுத்தமற்றதுமான நிலையில்" வைத்திருக்க மேற்குலகம் முயலலாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாளை சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வரும். ஆனால் மேற்குலகின் இந்த முயற்சி நீண்ட நாட்களுக்கு வெற்றி பெறாது என்று அடித்துச் சொல்வதற்கு வலுவான பல காரணங்கள் உண்டு.

-வெப்பிளம்
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:07 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:17 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:24 PM
[No subject] - by இராவணன் - 04-25-2006, 02:24 PM
[No subject] - by kurukaalapoovan - 04-25-2006, 04:18 PM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 12:12 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 12:19 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 12:34 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 01:26 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 02:00 AM
[No subject] - by Mathan - 04-26-2006, 05:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)