Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Sri Lankan Kfir jets bomb LTTE controlled area in Trincomale
#8
திருமலை பிரதேசத்தில் தமிழர்கள் மீது முப்படைத் தாக்குதல்! திருகோணமலை பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தின் முப்படையினரும் இணைந்து தமிழர்கள் மீது பாரிய தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


விமானப் படை விமானங்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் குண்டுகளை வீசி வருகின்றன.

சம்பூர் மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களின் இலக்கந்தை, இறால்க்குழி, ஏ.பி.சென்ரர், கட்டைப்பறிச்சான் ஆகிய இடங்கள் மீது சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானங்கள் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நடத்தின.

அதே நேரத்தில் சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக டோராப் படகுகள் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை சுற்றி வளைத்து பீரங்கித் தாக்குதல்களை நடத்தின.

விமானக் குண்டு வீச்சு முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவ ஆட்டிலறித் தளங்களிலிருந்து தொடர்ச்சியாக கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து அப்பகுதி தமிழர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி ஒரு சிறுமி காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கொழும்புத் தாக்குதலையடுத்து 2 மணித்தியாலம் கழித்து மாலை 4 முதல் நாளை புதன்கிழமை காலை 6 மணிவரையில் ஊரடங்கு உத்தரவு திருமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரம், உப்புவெளி மற்றும் சீனன்குடா பகுதிகளில் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


- புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:07 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:17 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:24 PM
[No subject] - by இராவணன் - 04-25-2006, 02:24 PM
[No subject] - by kurukaalapoovan - 04-25-2006, 04:18 PM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 12:12 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 12:19 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 12:34 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 01:26 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 02:00 AM
[No subject] - by Mathan - 04-26-2006, 05:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)