04-25-2006, 10:19 PM
இந்த <b>சாசனம்</b> படத்திற்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும். இதில் நடித்திருக்கும் அரவிந்த்சாமிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரஞ்சிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் நிச்சயம் கிடைக்கும்.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
<b>குட்பை, மிஸ்டர் சவுத்ரி</b>
"தங்கப்பதக்கம்'' திரைப்படத்தின் தொடர்ச்சியாக மகேந்திரன் மற்றொரு கதையை எழுதினார். அதுதான் `குட்பை, மிஸ்டர் சவுத்ரி.''
ஓய்வு பெற்ற பின்பு எஸ்.பி.சவுத்ரி தனது பேரனை எப்படி ஆளாக்குகிறார், தன்னை விட மிகச்சிறந்த போலீஸ் அதிகாரியாக அவனை எப்படி உருவாக்குகிறார் என்பதுதான் கதை. இறுதியில் பேரன் அடையும் மகத்தான பெருமையை பார்த்த நிலையில் எஸ்.பி.சவுத்ரி எப்படி கம்பீரமாக உயிர் துறக்கிறார் என்பதுதான் உச்சகட்டம்.
இந்தக் கதையை திரைப்படமாக சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. பின்னர் கைவிடப்பட்டது.
<b><span style='color:red'>குறும்படம்:
`1996' என்ற குறும்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் மகேந்திரன். 30 நிமிடங்கள் ஓடும் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்கிறது.</b>
<b>திரைப்பட அனுபவங்கள்</b>
தனது திரைப்பட அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-
நான் திட்டமிட்டு திரைப்படத் துறைக்கு வரவில்லை என்றாலும்கூட எனக்கு கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. அந்தக் கனவிலிருந்துதான் என் படங்கள் உருவாயின.
இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு, அப்படிப்பட்ட கனவா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப் பார்த்துக் கொள்கிறேன்.''
மேற்கண்டவாறு கூறிய மகேந்திரன், திரை உலகில் தன்னைக் கவர்ந்த கலைஞர்கள் சிலர் பற்றி கூறியதாவது:-
சிவாஜிகணேசன்: உலக அதிசயங்களில் ஒன்றல்ல அவர்; எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட உலக அற்புதம். தமிழ் சினிமா தன் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞர். அந்த நடிப்புலக மாமேதை, நான் எழுதிய வசனத்தை பேசினார். என் போன்றவனுக்குத்தான் எத்தனை பாக்கியம், பெருமை!
சத்யஜித்ரே: தனது உன்னதமான திரைப்படங்கள் மூலம், உலக சினிமா வரலாற்றில் இந்தியாவுக்கு மிக உயர்ந்த அரியாசனத்தைத் தேடித்தந்தவர்.
டைரக்டர் ஸ்ரீதர்: இன்றைய இயக்குனர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த முன்னோடி. ஏராளமான புதுமைகளை தனது ஒவ்வொரு படத்திலும் அரங்கேற்றியவர்.
கே.பாலசந்தர்: தமிழ் சினிமாவில் இவர் சாதித்த சாதனைகள் அத்தனையும், அனைவருக்கும் பாடப்புத்தக்கள். ராசியான மோதிரக் கை கொண்ட இவரின் கண்பட்ட அத்தனை கலைஞர்களும் இன்று தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாரதிராஜா: பிற்காலத் தமிழ் சினிமாவில் புதிய களம் கண்டு மாபெரும் வெற்றி வாகை சூடிய ராஜா. அவர் தன் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய நதியை ஓடவைத்திட அந்த நதியில்தான் இன்று வரை எத்தனையோ டைரக்டர்கள் படகோட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவை, மண் வாசனையோடு தலைநிமிர வைத்தவர் பாரதிராஜாதான்.''
மேற்கண்டவாறு மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
<b>குடும்பம்</b>
மகேந்திரனின் மனைவி பெயர் ஜாஸ்மின்.
இவர்களது மகன் ஜான். விஜய் நடித்த "சச்சின்'' படத்தை இயக்கியவர் இவர்தான்.
டிம்பிள், அனுரீட்டா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
"மெட்டி'', "நண்டு'', "எனக்கு நானே எழுதிக்கொண்டது'' முதலான புத்தகங்களை மகேந்திரன் எழுதி உள்ளார். "உதிரிப்பூக்கள்'' திரைக்கதை-வசனம், புத்தகமாக வெளிவந்துள்ளது.</span>
நன்றி: மாலை மலர்