Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீலங்கா இராணுவ தலைமையகத்தில் குண்டுவெடிப்பு
#19
<b>இலங்கை இராணுவத் தலைமையக்த்தின் மீது குண்டுத் தாக்குதல், 8 பேர் பலி;
திருகோணமலையில் வான் மற்றும் கடல்வழித் தாக்குதல்கள்</b>

-BBC கொழும்புச் செய்தியாளர்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/03/20060317164342sarath203d.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இலங்கை இராணுவத் தலைமையக மருத்துவமனை வாசலில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் 8 பேர் கொல்லப்பட்டனர்; இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும் மேலும் 27 பேரும் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும் , இலங்கை படையினருக்கும் மோதல்கள் நடந்துள்ளதாக அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன. மிக் ரக விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.


காயமடைந்த லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா

இராணுவ மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பார்க்க வருவது போன்று அங்கு வந்த ஒரு பெண் தற்கொலையாளி பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் இராணுவ தளபதியின் வாகனத்தின் மீது பாய்ந்து குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீது குற்றஞ்சாட்டுகிறது.

இராணுவத்தளபதி தனது அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்த போது, விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலையாளி தன்வசம் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.


இராணுவப் பேச்சாளர்

இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், இராணுவத் தளபதியும் மேலும் 27 பேரும் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

இராணுவத் தளபதியின் உடல்நிலை அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாகவும் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

காயமடைந்த இராணுவ தளபதி தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இராணுவத்தின் தலைமைத் தளபதி ஒருவர் இலக்கு வைத்து தாக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கிடையே ஏற்கனவே வன்செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை நகரான திருகோணமலையில் இன்று பிற்பகல் 4 மணி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Reply


Messages In This Thread
[No subject] - by yarlmohan - 04-25-2006, 09:21 AM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 09:27 AM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 09:45 AM
[No subject] - by Mathuran - 04-25-2006, 09:56 AM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 09:59 AM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 10:25 AM
[No subject] - by Sriramanan - 04-25-2006, 10:31 AM
[No subject] - by தூயா - 04-25-2006, 10:44 AM
[No subject] - by Mathuran - 04-25-2006, 10:44 AM
[No subject] - by sri - 04-25-2006, 11:15 AM
[No subject] - by mayooran - 04-25-2006, 11:30 AM
[No subject] - by தூயவன் - 04-25-2006, 01:34 PM
[No subject] - by kurukaalapoovan - 04-25-2006, 01:40 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 01:41 PM
[No subject] - by mayooran - 04-25-2006, 02:05 PM
[No subject] - by தூயவன் - 04-25-2006, 02:19 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:19 PM
[No subject] - by AJeevan - 04-25-2006, 02:24 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-25-2006, 07:55 PM
[No subject] - by kurukaalapoovan - 04-25-2006, 08:24 PM
[No subject] - by Thala - 04-25-2006, 10:13 PM
[No subject] - by Mathan - 04-26-2006, 12:12 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 02:45 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 02:46 AM
[No subject] - by mathanarasa - 04-26-2006, 04:48 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 04:51 AM
[No subject] - by Danklas - 04-26-2006, 05:01 PM
[No subject] - by கந்தப்பு - 04-27-2006, 12:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)