04-25-2006, 01:41 PM
(5 ஆம் இணைப்பு) கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவத் தளபதி உட்பட 27 பேர் படுகாயம்- 8 பேர் பலி
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.
"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவ மருத்துவமனையில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக கர்ப்பிணிப் பெண் போல் வந்த தற்கொலைதாரிதான் இத்தாக்குதலை நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பில் கூறப்படுவதாவது:
இராணுவத் தளபதியினது வாகனம் தன்னை கடந்து செல்லும் வரையில் பெண் தற்கொலைதாரி வெளிப்புற வாயிலில் காத்திருந்தார்.
பிற்பகல் உணவுக்காக சரத் பொன்சேகா புறப்பட்டுச் சென்ற போது அவரது வாகனத்தை நெருங்கிய அப்பெண் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் கொல்லப்பட்டனர்.
படுகாயமடைந்த 28 பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு தேசிய மருத்துவமனையில் படுகாயங்களுடன் சத்திர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 2 இராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் இராணுவ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி சரத் பொன்சேகா உட்பட 14 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதிக்கு அவசர சத்திர சிகிச்சை செய்த பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை நீதிபதி பார்வையிட்டு காவல்துறையினர் மற்றும் பகுப்பாய்வினருடன் விசாரணை நடத்தினார்.
இத்தாக்குதலில் கொல்லப்பட்டோர் மற்றும் படுகாயமடைந்தோரை அடையாளம் காணும் பணி தொடர்கிறது என்று இராணுவத்தரப்பினர் தெரிவித்தனர்.
சரத் பொன்சேகாவுக்கு சத்திர சிகிச்சை முடிவடைந்து அவர் உடல்நிலை தேறிவருவதாகவும் அவருக்கு வயிற்றிலும் மார்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது' என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு குண்டுவெடிப்பையடுத்து நகரின் பாதுகாப்பை அதிகப்படுத்த அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். கொழும்பு இரகசியப் பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி: புதினம்