Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீலங்கா இராணுவ தலைமையகத்தில் குண்டுவெடிப்பு
#4
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவ தளபதி மற்றும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் புஸ்பா சொய்சா கூறினார்.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது" என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

"பாரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக தகவலைத் தெரிவிக்க இயலாத நிலை இருப்பதாகவும்" சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நன்றி: புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by yarlmohan - 04-25-2006, 09:21 AM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 09:27 AM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 09:45 AM
[No subject] - by Mathuran - 04-25-2006, 09:56 AM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 09:59 AM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 10:25 AM
[No subject] - by Sriramanan - 04-25-2006, 10:31 AM
[No subject] - by தூயா - 04-25-2006, 10:44 AM
[No subject] - by Mathuran - 04-25-2006, 10:44 AM
[No subject] - by sri - 04-25-2006, 11:15 AM
[No subject] - by mayooran - 04-25-2006, 11:30 AM
[No subject] - by தூயவன் - 04-25-2006, 01:34 PM
[No subject] - by kurukaalapoovan - 04-25-2006, 01:40 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 01:41 PM
[No subject] - by mayooran - 04-25-2006, 02:05 PM
[No subject] - by தூயவன் - 04-25-2006, 02:19 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:19 PM
[No subject] - by AJeevan - 04-25-2006, 02:24 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-25-2006, 07:55 PM
[No subject] - by kurukaalapoovan - 04-25-2006, 08:24 PM
[No subject] - by Thala - 04-25-2006, 10:13 PM
[No subject] - by Mathan - 04-26-2006, 12:12 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 02:45 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 02:46 AM
[No subject] - by mathanarasa - 04-26-2006, 04:48 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 04:51 AM
[No subject] - by Danklas - 04-26-2006, 05:01 PM
[No subject] - by கந்தப்பு - 04-27-2006, 12:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)