04-25-2006, 09:21 AM
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவ தளபதி உள்ளிட்டோர் படுகாயம்!
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவ தளபதி மற்றும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் புஸ்பா சொய்சா கூறினார்.
நன்றி: புதினம்