04-24-2006, 11:32 AM
முன்பு மாணவர் அமைப்பில் இருந்த பலர் தற்பொழுது எவ்விதமான செயற்பாடுகளிலும் இல்லை என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கான நிதி சேகரிப்பு, பரப்புரை, உடல் உழைப்பு என்று எதிலுமே தற்பொழுது அவர்கள் இல்லை. இத்தனைக்கும் அப்பொழுது இருந்த பலர் தாயகத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள். அங்கு பிறந்து, அங்குள்ள நிலையை ஓரளவு நேரடியாக அறிந்தவர்கள். அவர்களையே காணவில்லை.
அவர்கள் காணமற் போனதற்கான காரணிகள் தற்பொழுதும் உண்டு. ஆகவே இளையோர் அமைப்பில் மிதமிஞ்சிய நம்பிக்கை வைத்து பின்பு ஏமாந்து போய்விடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.
அவர்கள் காணமற் போனதற்கான காரணிகள் தற்பொழுதும் உண்டு. ஆகவே இளையோர் அமைப்பில் மிதமிஞ்சிய நம்பிக்கை வைத்து பின்பு ஏமாந்து போய்விடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.