Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பயங்கரமான போரை நோக்கி இலங்கை: அன்ரன் பாலசிங்கம்
#1
சிறிலங்கா இராணுவத்தாலும் துணை இராணுவக் குழுவினராலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வருவதால் இலங்கை ஒரு பயங்கரமான போரை நோக்கிச் செல்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் எச்சரித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல்:
வடக்கு-கிழக்கின் நிலைமை மிகவும் மோசமடைந்து சீர்குலைந்துள்ளது. கடந்த டிசம்பர் மற்றும் சனவரியைப் போல் நிழல் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டு மிக மோசமான நிலை உருவாகி உள்ளது.
ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலைகள் மீது துணை இராணுவக் குழுவினரது உதவியுடன் தாக்குதல்கள் தொடங்கிவைக்கப்பட்டன.
சிறிலங்கா அரச படைகளால் கருணா குழுவினருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வி.விக்னேஸ்வரனை சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து படுகொலை செய்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
துணை இராணுவக் குழுவினர் இல்லை என்று தொடர்ந்து மகிந்த ராஜபக்ச கூறிவருன்கிறார். இத்தகைய வெட்கக்கேடான அரசாங்க மறுப்புகள் மூலம் ஜெனீவா உடன்பாடு அர்த்தமற்றதாகிவிட்டது. தமிழ் துணை இராணுவக் குழுக்களை அரசாங்கமே பாதுகாக்கிற போது வன்முறைகள் நிறுத்தப்பட்டு முன்னேற்றகரமான அமைதிச் செயற்பாடுகள் எப்படி மேற்கொள்ள முடியும்?
துணை இராணுவக் குழுவினரது வன்முறைகளும் அவர்கள் தொடர்பிலான அரசாங்கத்தினது செயற்பாடுகளும் அமைதி முயற்சிக்கு பாரிய அச்சுறுத்தல் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
தமிழர் தாயகப் பகுதிகளில் பழிக்குப் பழிவாங்கும் விதமாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிற மோசமான சூழ்நிலையானது ஒரு பயங்கரமான இனப் போருக்குத்தான் இந்த நாட்டை தள்ளும்.
ஜெனீவாவில் அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் எதைப் பற்றி பேசுவது என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய இரு தரப்பினர் ஜெனீவாவில் பேச்சுக்கள் நடத்தி அதை மதித்து நடக்கவும் தொடர்ந்து கடைபிடிக்கவும் ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இருதரப்பு நம்பிக்கையின்மை, சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன. அமைதி முயற்சிகளில் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் உள்ளது என்ற சந்தேகதம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ் துணை இராணுவக் குழுக்கள் விடயத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது. கருணா குழுவை தமிழர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச கணக்கிட்டு வருகின்றார். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இராணுவ வழித் தீர்வை விட்டுக் கொடுக்கவில்லை.
கடும்போக்காளர்களை பாதுகாப்பு பொறுப்புகளில் அவர் நியமித்தார். அமைதி வழித் தீர்வில் நாட்டமில்லாத, நோர்வே அனுசரணையாளர்கள் மீது சந்தேகம் கொள்கின்ற விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் பரப்புரை மேற்கொண்டு பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்ற போக்குடைய இத்தகைய நபர்களின் நியமனமானது மகிந்த ராஜபக்சவின் இராணுவ வழித் தீர்வு நாட்டத்தையே வெளிப்படுத்துகின்றது.
அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் வடக்கு-கிழக்கின் பொருண்மிய அபிவிருத்தி தொடர்பாக விவாதிக்கலாம் என்று சில அமைச்சர்கள் கூறியுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் இத்தகைய யோசனைகள் நகைப்பிற்குரியன. போர் அச்சுறுத்தல் உள்ள நிலைத்தன்மையற்ற சூழ்நிலையில் பொருண்மிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது.
வடக்கு கிழக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் என்று கூறப்படுகிற பிரதேசங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு இழந்து வருகிறது. அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியாமல் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது. அவசரகால சட்டத்தின் மூலமாக தமிழர் தாயக ஆக்கிரமிப்புப் பகுதிகளை அரசாங்க படைகள் நிர்வகித்து வருகின்றன. யாழ்ப்பாணத்திலும் இதர தமிழர் பகுதிகளிலும் சரத் பொன்சேகாவின் கொடுங்கோன்மையான நிர்வாகம் இயங்கி வருகின்றது. இதனால் மக்களின் ஆயுத எழுச்சிக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு தொடர்பில்லாதவை குறித்து ஜெனீவாப் பேச்சுக்களில் பேசவும் அரசாங்கத்தரப்பில் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மகிந்தவின் சிந்தனையில் கற்பனை செய்து பார்க்கக் கூடிய செயற்திட்டங்களுக்கோ கொள்கைகளுக்கோ இடமில்லை.
தமிழ் பேசும் மக்களின் தாயகக் கோட்பாடு, பிரதேச தன்னாட்சி அரசாங்கம் ஆகியவற்றை எதிர்த்து ஒற்றையாட்சி யாப்பை வலியுறுத்துகின்றது.
தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை சிக்கலாகி வன்முறைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தினால்தான் நிலைமையைச் சீர்படுத்த முடியும்.
தற்போதைய பயண ஒழுங்கு பிரச்சனையால் ஏப்ரல் 24 ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறாது. பயண ஒழுங்குப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் போது பேச்சுக்கள் மீண்டும் நடைபெறும் என்றார் அன்ரன் பாலசிங்கம்.
http://www.eelampage.com/?cn=25720
Reply


Messages In This Thread
பயங்கரமான போரை நோக்கி இலங்கை: அன்ரன் பாலசிங்கம் - by adsharan - 04-23-2006, 05:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)