Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் கடிதம்
#11
<b>ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - காதல் கடிதம் பற்றி இயக்குநர் முகேஷ்</b>

<img src='http://www.webulagam.com/cinema/vip/0604/17/images/img1060417011_1_1.gif' border='0' alt='user posted image'>
இலங்கை வவுனியாவிலிருந்து சென்னைக்கு படிக்க வருகிறாள்... தன்னுடன் படிக்கும் ஒரு சென்னைப் பையனை காதலிக்கிறாள்.

இந்த நிலையில் தன் சொந்த நாட்டுக்கு சென்றுவருவதாகச் சொல்லி இலங்கை போனவள் போனவள் தான். திரும்பி வரவேயில்லை.

காத்திருந்து காத்திருந்து வெறுத்துப்போன காதலன் தன் காதலியைத் தேடி இலங்கைக்குச் செல்கிறான்... அங்கே .... அவனுக்கு நேர்ந்த, அவனுடைய காதலுக்கு நேர்ந்த அனுபவங்கள் தான் காதல் கடிதம் படத்தின் கதை.
<img src='http://www.webulagam.com/cinema/vip/0604/17/images/img1060417011_1_2.gif' border='0' alt='user posted image'>
இப்படி சர்ச்சைக்குரிய படம் ஒன்று தயாராகி வருகிறது.

இதுபற்றி தெரிந்துகொள்ள டைரக்டர் முகேஷ் முன்பு ஆஜரானோம்.

பாரதி கண்ணையா படத்திலிருந்து ஆட்டோகிராஃப் வரை சேரனிடம் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து எனது முதல் படம் காதல் கடிதத்தை இயக்கி வருகிறேன்.

சேரன் பட்டறையிலிருந்து வந்ததால் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தியை உள்ளடக்கிய ஒரு படத்தைத் தரவேண்டும் என்கிற ஆசை உண்டு.

காதல் என்கிற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு திரைக்கதையை உருவாக்கியதோடு இந்த நாட்டுக்கென்ன உலகம் முழுவதற்குமான ஒரு மெஸேஜ் இந்தக் கதைக்குள் வந்து விழுந்தது. யுத்தம், அது வேண்டாம். அன்புதான் இந்த உலகத்திற்குத் தேவை என்பதை ஒரு காதல் கடிதம் மூலம் சொல்லியிருகிறேன். அதனால்தான் இந்தப்படத்திற்கு காதல் கடிதம் என்று பெயர் வைத்தோம்.

யுத்தத்தின் விளைவுகளைச் சொல்லப்போகிறீர்கள் என்றால் படத்தில் யுத்தக் காட்சிகளும் இடம் பெறுகிறதா?

யுத்தக் காட்சிகள் கிடையாது. ஆனால் அந்த யுத்தங்களால் ஏற்பட்ட காயங்கள், வலிகள், இழப்புகள், பறிபோன வாழ்க்கை என மனசு வலிக்க வலிக்க அந்தக் காட்சிகளை காட்டியிருக்கிறோம். நிச்சயம் இதயங்களை தொடும்படி இருக்கும் அந்தக் காட்சிகள்.

ஒரு களத்தின் பாதிப்புகளைச் சொல்லவேண்டும் என்றால் நேரடியாக அந்தக் களத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் இலங்கைக்குச் சென்று படமெடுத்தீர்களா?

ஆமாம்! சம்பந்தப்பட்ட காட்சிகளை இலங்கைக்கே சென்று படமெடுத்தோம்.

ஸ்ரீலங்கா ஃபிலிம் கார்பரேஷனின் ஒத்துழைப்போடு இதுவரை காட்டப்படாத இலங்கை லொகேஷனையும் படமெடுத்து வந்திருக்கிறோம்.

இரண்டு இனங்களுக்கிடையேயான வாழ்வுரிமைப் பிரச்சினைகளால் தான் இலங்கையில் யுத்தம் வருகிறது. இந்த சூழ்நிலையில் யுத்தம் வருவதற்கான காரண கரியங்களையும் அலசியிருக்கிறீர்களா?

அந்த எல்லைக்குள் நாங்கள் போகவில்லை. உலகின் எந்த மொழி, இனத்துக்காரராக இருந்தாலும் இந்தப் படத்தைப் பார்த்தால் யுத்தம் வேண்டாம் என்றுதான் நினைக்கத் தோன்றும். நாங்கள் இந்தத் தளத்தில் இருந்துதான் படம் பிடித்திருக்கிறோம்.

இப்படி ஒரு பரபரப்பான கதையை தயாரிக்க முன்வந்தது யார்? உங்களுக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது?

இலங்கை ஃபிலிம் கார்பரேஷனில் பணிபுரியும் தேவதா° என்பவர் மூலம் இந்த வாய்ப்பு வந்தது. இலங்கைத் தமிழரான, தற்சமயம் கனடாவில் வசிக்கும் தில்லைவண்ணன் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவருக்கு யுத்த பாதிப்புகள் நன்றாகவே தெரியும். அதனால்தான் இந்தக் கதையைப் படமெடுக்க அவரும் முன்வந்தார்.

படத்தில் வேறு என்ன விசேஷம்?

படத்தின் ஹீரோ ஸ்ரீபாலாஜி, சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவருகிறார். ஹீரோயின் அனிஷா, சென்னை கல்லூரி ஒன்றில் பிஃபார்ம் படித்து வருகிறார். படத்தில் அழுத்தமான ஒரு செய்தி இருந்தாலும் இளைஞர்களுக்கு தேவையான மாடர்ன் டைப்பில் தான் ஒரு கலகலப்பான படமாக எடுத்து வருகிறோம் என்றார் முகேஷ்.

அருகே இருந்த தயாரிப்பாளர் தில்லைவண்ணனிடம் பேசினோம்.

நான் கனடாவில் வசித்து வந்தாலும் உலகம் முழுக்க ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். சினிமா என்பது நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் சொல்லக்கூடியதுதான். அதில் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களை எடுத்துகொள்ள வேண்டும் என என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர். தான் வாழ்க்கையில் உயர்ந்ததற்குக் காரணமே எம்.ஜி.ஆர் படங்களில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்றியதுதான் எனச் சொல்லுவார். சினிமா மூலம் நல்ல விஷயங்களை இந்த உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் தான், ஆசையில் தான் இந்தப் படத்தை தயாரித்து வருகிறேன் என்றார்.

(வெப்புலகம்)
::
Reply


Messages In This Thread
காதல் கடிதம் - by Mathuran - 01-21-2006, 01:44 PM
[No subject] - by Vasampu - 01-21-2006, 03:39 PM
[No subject] - by Mathan - 01-21-2006, 04:05 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-21-2006, 04:25 PM
[No subject] - by iruvizhi - 01-21-2006, 08:29 PM
[No subject] - by Vishnu - 01-22-2006, 02:05 PM
[No subject] - by KULAKADDAN - 01-29-2006, 03:19 PM
[No subject] - by Mathuran - 01-29-2006, 10:28 PM
[No subject] - by Mathuran - 04-23-2006, 12:00 PM
[No subject] - by Mathuran - 04-23-2006, 12:02 PM
[No subject] - by Thala - 04-23-2006, 12:13 PM
[No subject] - by mathanarasa - 04-23-2006, 02:30 PM
[No subject] - by putthan - 04-25-2006, 04:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)