04-22-2006, 10:06 AM
<b>கமலிடம் ரூ. 100 கோடி பேரம்: ஆளும் தரப்பு நெருக்குதல் அமெரிக்கா சென்றார் கமல் </b>
ஏப்ரல் 21, 2006
<b>சென்னை:</b>
<i>அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு நடிகர் கமல்ஹாசனிடம் ரூ. 100 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட கமல் உடனடியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பிரபல திரைப்பட நடிகரை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறும், இதற்காக ரூ. 100 கோடி வரை கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும், ஆனால், அந்த நடிகர் அதை ஏற்கவில்லை என்றும் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.
இதையடுத்து அந்த நடிகர் யார்? ரஜினியா என்று நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டனர்.
அதற்கு, அவர் இல்லை. அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் என பதிலளித்தார்.
இந் நிலையில் அந்த நடிகர் யார் என்பது இப்போது வெளியில் வந்துள்ளது.
நான் அரசியலிலேயே இல்லை.. நான் இலக்கியவாதி என்று கூறிக் கொண்டு அரசியல் செய்து வரும் தில்லை அம்பலத்தார் தான் கமலையும் அதிமுகவுக்கு இழுக்க முயற்சி செய்துள்ளார்.
கமல் தரப்பைத் தொடர்பு கொண்டு, நிதிப் பற்றாக்குறையால் நின்று போய்விட்ட உங்கள் மருதநாயகம் படத்தை முடித்துத் தருகிறோம். உங்களுக்கு ரூ. 100 கோடி தரவும் தயாராக இருக்கிறோம் என்று பேரம் பேசியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன கமல், எனக்கு அரசியலே வேண்டாம். எனக்கு அது சரிப்பட்டு வராது என்று கட்அண்ட்ரைட்டாக சொல்லிவிட்டார்.
அத்தோடு இங்கிருந்தால் தொல்லை தொடரும் என்பதால் உடனே அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். தேர்தல் முடிந்த பின்னரே அவர் ஊர் திரும்புவார் என்று தெரிகிறது.
இது குறித்து கமலின் உதவியாளர் குணசீலன் கூறுகையில், கமல் சாரை யாரும் அணுகவில்லை. தனது தசாவதாரம் பட வேலை விஷயமாக அவர் அமெரிக்கா போயுள்ளார் என்றார்.
மேலும் அவர் மே மாதம் 20ம் தேதி தான் சென்னை திரும்புவார் என்றார்.
மே 8ம் தேதி தேர்தலும் 11ம் தேதி வாக்குப் பதிவும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர், நடிகையர்கள் களத்தில் குதித்தும் கூட அதிமுகவுக்கு நிலைமை சாதகமாகத் திரும்பாததாலும், ரஜினி கைவிட்டுவிட்டதாலும் கமலை ஆளும் தரப்பு குறி வைத்ததாகத் தெரிகிறது. </i>
[i]நன்றி தற்ஸ்தமிழ்

<i><b> </b>
</i>
</i>