04-22-2006, 08:14 AM
<b>கனடாவில் புலிகள் தடை-உடன் சட்ட உதவி அல்லது ஆலோசனை</b>
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது கனடாவில் விதிக்கப்பட்டுள்ள தடையும் அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள சட்டமும் கனடியத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதிக்காது பார்த்துக்கொள்ளும் வகையில் ஒரு சட்டக்குழுவின் உதவியை நாடியுள்ளோம்.
அதன் பிரகாரம் பின்வரும் விடயங்களை எம் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
நீங்கள் எவராவது விசாரணை ஒன்றின் நிமிர்த்தம் பாதுகாப்புத் துறையினரால் அணுகப்படுமிடத்து, உடனடியாகப் பேசுவதை நீங்கள் தவிர்க்கும் உரிமை உங்களிற்கு உண்டு. ஒரு வழக்கறிஞருடன் பேசி அவர் முன்னால் பேசுவதை நீங்கள் விரும்புவதாகக் கூறலாம்.
நீங்கள் எவராவது சார்ந்த இடமொன்றை சோதனையிட முனைந்தால், அதற்கான சட்ட ஆவணம் இருக்க வேண்டும். அவ்வாறு யாராவது பாதுகாப்புத் துறையினர் முனைந்தால், அவ்வாநான சட்ட ஆவணம் உண்டா என்பதை உறுதி செய்யவும். அதில் விபரங்கள் சரியாக உள்ளனவா என்று பார்ப்பதுடன் சட்ட ஆவணம் அற்ற சோதனைகளுக்கு உங்கள் ஆட்சேபனையைத் தெரிவிக்கும் உரிமையும் உங்களுக்குண்டு.
நீங்கள் எவராவது மேற்கண்டவாறு சூழ்நிலைகளையோ அல்லது எச்சந்தர்ப்பத்திலாவது வேறொருவிதமான சூழ்நிலைகளுக்கோ உட்பட நேர்ந்தால், உடன் சட்ட உதவி அல்லது சட்ட ஆலோசனை தேவைப்பட்டால் தாமதமின்றி கீழேயுள்ள தொலையேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். அது குறித்த உதவிகளை நாம் மேற்கொள்வதற்குக் தயாராக உள்ளோம்.
தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 416-335-0622
ஆதார இணைப்பு
உலகத்தமிழ் ஊடகம் - World Tamil Press

<b>
...</b>
...</b>