02-16-2004, 10:35 PM
BBC Wrote:Eelavan Wrote:முதலில் நாம் எந்த வேலையிலும் தமிழ் தான் எமது தாய் மொழி அதனால் தமிழ் மட்டும் தான் பேச வேண்டும் ஆங்கிலத்தை திரும்பியும் பார்க்கக்கூடாது என்று சொல்வதில்லை நீங்கள் தமிழ் வெறியன் என்று சொன்னாலும் சரி தமிழ்க் கிருக்கன் என்று சொன்னாலும் சரி எங்களுக்கு தேவை எமது தாய் மொழி இத்தனை காலமும் எமது முன்னோர் கட்டிக்காத்து எமக்கு பரிசளித்த முதுசம் அழிந்து போய்விடக்கூடாது
அதுதான் எமது குரலே ஒழிய ஆங்கிலத்திற்கு நாம் என்றும் எதிரானவர்கள் அல்ல ஏன் நான் எனது உயர்கல்வியை ஆங்கிலத்தில் தான் கற்கிறேன் ஆனாலும் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று மற்றவர்களுகு காட்டிகொண்டு இருப்பதை விட நான் தமிழன் எனது தாய் மொழி தமிழ் என்று கூறுவதில் பெருமையடைகிறேன் நான் பெருமை அடைவதுடன் நின்றுவிடாது எனது சந்ததிக்கும் இது சேரும் வகை தமிழை கட்டிக்காக்க வேண்டும் என நினைக்கிறேன் அதற்காக தான் பேசும் போதும் எழுதும் போதும் தமிழுடன் ஆங்கிலத்தையோ வேறு மொழிகளையோ கலக்க வேண்டாம் என்று சொல்கிறோம் ஆங்கிலத்தையோ வேறு மொழிகளையோ கற்க வேண்டாம் என்று சொல்லவில்லை உங்களுக்கு பல்வேறு மொழிகளில் இருக்கும் புலமையை எமது தாய் மொழியை வளர்ப்பதர்கு பயன் படுத்துங்கள் அதனை அழிப்பதற்கு பயன்படுத்தாதீர்கள்
இலங்கையில் ஆங்கிலக்கல்வி கட்டாயமாக்கப்படல் வேண்டும் இது எனது கருத்தும் கூட ஆனால் குடியுரிமை பத்திரத்தில் தமிழன் என்று கூறப்பட்டிருக்கும் ஒவ்வொருத்தனும் தமிழை நன்கு அறிந்திருத்தல் வேண்டும் இதுவும் கட்டாயமாக்கப்ப்ட வேண்டும்
இதை ஏன் வலியுறுத்துகின்றேன் என்றால் எனது நண்பன் யாழ்ப்பனத்தில் பிறந்து கைக்குழந்தையாக இருக்கும் போது பெற்றோருடன் கொழும்பு வந்து அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டவன் பெற்றோர் பிள்ளையின் கல்வி முக்கியம் கருதி கொழும்பில் உள்ள பெயர் பெற்ற பாடசாலையில் சேர்த்து விட்டனர்.அவன் கல்வி கற்றது முழுவதும் ஆங்கிலத்தில் நண்பர்களுடன் பேசுவது ஆங்கிலத்தில் பெற்றொரின் காரணமாக நன்கு தமிழும் பேசுவான் ஆனால் எழுதத்தெரியாது........
இவன் ஒரு இலங்கை தமிழன் இது இவனது பிழை கூட இல்லை அவன் வளர்ந்த சூழல் அப்படி அவனுக்கு தமிழ் படிக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை இப்படி எத்தனையோ தமிழ் குழந்தைகள் தமிழ் தெரியாத தமிழர்களாக அலைகின்றன
தமிழ் மொழியை படிப்பதும் படிக்காமல் விடுவதும் அவனது உரிமை ஆனால் அவனுக்கு தமிழ் கற்பித்திருக்க வேண்டியது அவனது பெற்றோரது கடமை அவனது பெற்றோர் அதிலிருந்து தவறும் போது அது சமூகத்தின் கடமையாகின்றது அது தான் அரசாங்கத்தின் வேலை இலங்கையில் தமிழும் அரச கரும மொழியாக இருக்கும் போது தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்க வேண்டும்
சிஙபூரில் சட்டம் என்ன தெரியுமா ஓவ்வொரு சிங்கப்பூர் குடிமகனும் தாய்மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் அவன் வேலை தேடுவதாக இருந்தாலும் சரி மேற்படிப்பு படிப்பதாக இருந்தாலும் சரி அடிப்படை தகமை தாய் மொழியில் சித்தி
இங்கு தமிழரின் எண்ணிக்கை ஓரளவுதான் உண்டு ஆயினும் தமிழ் இங்கு அரசகரும மொழி எமது மொழிக்கு தமிழ் நாட்டிலோ இலங்கையிலோ கொடுக்காத சிறப்பை இங்கு கொடுக்கிறார்கள்
இதையே எமது அரசாங்கம் செய்யுமா என்றால் இல்லை அதற்கு தமிழ் மொழி அழிவதில் சந்தோசமன்றி வேறில்லை எனவே அந்தக் கடமையை நாம் தான் செய்யவேண்டும் உலகப்பொதுமொழி ஆங்கிலம் கற்போம் நாம் கற்பதுடன் நின்று விடாது எமது தாய் நாட்டுக்குழந்தைகளும் கற்க வகை செய்வோம் ஆங்கிலம் மட்டும் என்றில்லை நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள அத்தனை மொழியையும் படியுங்கள் அந்தந்த மொழியில் உள்ள பிரயோசனமானவற்றை தாய் மொழிக்கு கொண்டு வாருங்கள்
அதை விடுத்து ஆங்கிலம் தெரியாதவர்கள் தான் தனித்தமிழ் என்கிறார்கள் என்பது வெறும் பசப்பு
நீங்க நா சொன்ன அதே கருத்த தான் யாழ்ப்பாண தமிழ்ல சொல்லியிருக்கிறீங்க.
உங்க சிங்கப்பூர் இருக்கமாதி இலங்கையிலயும் ஆங்கிலம் நிர்வாக மொழியா வரணும். அது கூட தாய்மொழியும் கட்டாயம் துணை மொழியா இருக்கணும். பல இனமக்கள் வாழ்ற நாட்டுக்கு அதுதான் சரி.
vasisutha Wrote:சிறீலங்காவின் அரசியல் தலைவர்கள் பற்றி சிங்கப்புூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யுூ
தனது நூல் மூலம் கூறியவை.
[size=15]1956 ஆம் ஆண்டு லண்டனுக்குப் போகும் வழியில் எனது பிரயாணத்தை இடைநிறுத்தி சிறீலங்காவுக்கு (அப்போது சிலோன் என்று பெயர்) முதன் முறையாகச் சென்றேன். அதே வருடம் சிறீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் சொலமன் வெஸ்ற்றிஜ்வே பண்டாரநாயக்கா பொதுத்தேர்தலில் வெற்றியடைந்து தனது நாட்டின் பிரதமரானார். சிங்களத்தை தேசிய மொழியாகவும், புத்த மதத்தை தேசிய மதமாக வும் உயர்த்துவேனென்று அவர் தேர்தல் வாக் குறுதி அளித்திருந்தார்.
பண்டாரநாயக்கா ஒரு அசல் பழுப்பு நிற வெள்ளைக்காரன், ஆங்கிலக்கல்வி பெற்றவர். கிறீஸ்தவராகப் பிறந்தவர். பின்பு சுதேசியாக மாறி புத்த மதத்தைத் தழுவியவர். சிங்கள மொழிவெறியராகவும் அவர் மாறிவிட்டார். சிலோனின் சீரழிவு இப்படித்தான் ஆரம்பித் தது. டாம்பீகமாக ஆங்கில உடையணிந்த, உயரத்தில் குறைந்தவரான இந்த மனிதர் நன்றாகப் பேசுவார். சிலோனை ஒரு சிங்கள மக்களுக்குரிய நாடாக மாற்றுவேன் என்ற வாக்குறுதியுடன் அவர் தேர்தலில் வெற்றியைப் பெற்றார்.
பிரிட்டிசாரின் வாழ்க்கைமுறை, அவர்களைப் போன்ற நடையுடை போன்ற அடையாளங் களுடன் உலாவிய மேட்டுக் குடியினருக்கு எதிரான புரட்சியாக அவருடைய குரல் ஒலித் தது. பண்டாரநாயக்காவினால் தோல்வி யுறச் செய்யப்பட்ட பிரதமர் சேர் ஜோன் கொத்லா வலை ஒவ வொரு காலையும் குதிரை ஏற்றம் செய்வார். யாழ்ப்பாணத் தமிழர்களும் பிற சிறுபான்மையினரும் பின் நிலைக்குத் தள்ளப் படுவார்கள் என்பது பற்றி தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவந்த பண்டாரநாயக்கா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
புத்தமதம் தேசிய மதமாக்கப்படுவதால் இந்து மதத் தமிழர்கள், இஸ்லாம்மத முஸ்லீம்கள், கிறீஸ்தவ மத பறங்கியர்கள் கலவரம் அடைவாh கள் என்பது பற்றியும் அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒக்ஸ்போட் பல் கலைக்கழகத்தின் ஒக்ஸ்போட் யுூனியன் மா ணவர் சங்கத்திற்கு அவர் தலைவராக பதவி வகித்தவர். இந்தச் சங்கத்தில் நடக்கும் விவா தங்களில் பங்கெடுத்துப் பேசுவதுபோல அவர் பின்பு வாதிடுவது வழமை.
பிரித்தானியா தலைமையில் இயங்கிய பொது நலவாய நாடுகள் கூட்டமைப்பில் சிலோன் ஒரு உன்னத ஸ்தானத்தை வகித்தது. சுதந்தி ரத்தை நோக்கிய பாதையில் சிலோன் மிகவும் கவனமாக வளர்க்கப்பட்டது. இரண்டாம் உல கப்போர் முடிந்த காலத்தில் 10 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நடுத்தர நாடாக சிலோன் விளங்கியது. திருப்தி கரமான உயர்தரக் கல்வி வழங்கும் இரு பல்கலைக்கழகங்களும் அங்கு காணப்பட்டன. பொதுவாக சிலோன் மக்கள் நல்ல கல்வியறிவு உள்ளவர்களாக இருந்தனர்.
உள்நாட்டு மக்களைக்கொண்ட நிர்வாக சேவை ஆட்சியாளர்களுக்கு உதவியது. பிரதி நிதித்துவ அரசுமுறை அனுபவம், சுதந்திரம் அடைவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே சிலோன் மக்களுக்குக் கிடைத்துள்ளது. தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் அவர்கள் தேர்தல்களைச் சந்தித்துள்ளனர். 1930களில் மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்கள் அங்கு ஆரம்பித்தன. படிமுறை வளர்ச்சிப்பாதையில் காலடி பதித்து 1948இல் சுதந்திரம் பெற்ற போது பிறநாடுகள் சிலோனை உதாரண மாகப் பின்பற்றும் அளவிற்கு அதனுடைய முன்னேற்றம் காணப்பட்டது.
[b]அரசகரும மொழியாக ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களம் இருத்தப்பட்டபின் தமிழர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்தனர். தேசிய மதமாக புத்தமதம் கொண்டுவரப்பட்டதால் இந்துத் தமிழர்கள் கசப்படைந்தனர். ஒக்ரோபர் 1966இல் லண்டனில் நடந்த பிரதம மந்திரிகள் மாநாட்டில் பங்குபற்றிவிட்டு சிங்கப்புூர் திரும்பும் வழியில் கொழும்பு வந்தேன். அப்போது சிலோன் பிரதமராக டட்லி சேனநாயக்கா பதவி வகித்தார். அவர் வயது வந்த மனிதராகவும் வீணில் பழிபோடும் இயல்பு உடையவராகவும் காணப்பட்டார்.
எனக்குத் தரப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் சிலோனுக்கு நடந்ததைத் தவிர்க்கமுடியாது என்று ஒரு மூத்த சிங்கள விருந்தினர் எனக்கு விளக்கிக்கூறினார். தேர்தலின் பெறுபேறுகள்தான் இத்த னை குழப்பத்திற்கும் காரணம் என்று அவர் சொன்னார். ஆட்சி செய்யும் இனமாக சிங்களவர்கள் இருக்க விரும்புகிறார்கள். பிரிட்டிசாரின் வாரிசுகளாக மேலாதிக்க நிலையில் இருக்க ஆவலாக உள்ளனர். மூத்த நிர்வாக அதிகாரிகளாக பிரிட்டிசாரின் கீழ் இருந்த தமிழர்களைத் தள்ளிவிட்டு தாமே நிர்வாகஞ்செய்ய ஆர்வமாக உள்ளனர்.
சிங்களத்தை அரசகரும மொழியாக்கி அவர்கள் படும் துன்பத்தை என்னால் உணரமுடிகின்றது.இதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிகப்பெரியது. பாடநூல்கள், நிர்வாக விதிமுறைகள், கோப் புக்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் இருந்து சிங்களம், தமிழ் ஆகியவற்றிற்கு மொழிமாற்றம் செய்கிறார்கள். இதற்கு அவர்கள் செலவிடும் நேரமும், பணமும் வீண்விரயமாக்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில் மூன்று மொழிகளிலும் பாடம் நடத்துகின்றார்கள்.
சிங்களவர்களுக்குச் சிங்களம், தமிழர்களுக்குத் தமிழ், பறங்கியவர்களுக்கு ஆங்கிலம். பெரதேனியா பல்கலைக்கழக உபவேந்தரை நான் இப்படிக்கேட்டேன்; மும்மொழியில் பயிற்றப்பட்ட பெருந்தெருப் பொறியியலாளர்கள் இணைந்து எப்படி ஒரு மேம்பாலத்தைக் கட்டி முடிப்பார்கள்? அந்த உபவேந்தர் ஒரு பறங்கி இனத்தவர். தான் கேம்பிறிஜ் பல்கலைக்கழகம் சென்று கலாநிதிப்பட்டம் பெற்றதற்கு அத்தாட்சியாகக் கழுத்துப்பட்டி அணிந்திருந்தார்.
'ஐயா, நீங்கள் கேட்டது ஒரு அரசியல் கேள்வி, அதற்கு அமைச்சர்கள்தான் பதில் கூற வேண்டும்' என்று அவர் எனக்குப் பதிலளித்தார். நான் பாடப்புத்தகங்கள் பற்றியும் கேட்டேன். ஆங்கிலப் பாடநூல்கள் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பிரசுரமாகும்போது காலதாமத மாகிவிடும். இதனால் தமிழ், சிங்களப் பாடநூல்களில் பல குறைபாடுகள் தோன்றும். ஆங்கில நூல்கள் புதிதாகத் தோன்றும் வேகத்திற்கு ஈடாக மொழிமாற்ற நூல்கள் தோன்றும் வாய்ப் புக்கள் இல்லை. இதனால் கல்வி திருப்திகரமாக அமையாது. இவ வாறு கூறிய என்னை அவர் மறுத்துரைக்கவில்லை. [/color]
....erimalai...

