04-22-2006, 04:41 AM
கனடாவிற்கு வந்து அகதிநிலை அந்தஸ்தை கேட்கும் போது நாம் சொல்கின்ற பொய்களும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். பலருடைய கேஸ் கொப்பிகளை எடுத்துப்பார்த்தால் தெரியும். முக்கியமாக கோடு போட்டு காட்டியிரு்பார்கள். எம்மால் இலங்கையில் இருக்க முடியாது. புலிகளாலும் பிரச்சனை சிறிலாங்கா ஆமியாலும் பிரச்சனை என்று தான் கூறிப்பிட்டு இருப்பார்கள். புலிகள் நம்மை இவ்வளவு பணம் தரச் சொல்லி கேட்டார்கள். புலிகள் பிள்ளைகளை தங்களுடன் வரும்படி கேட்டார்கள் அது இது என்று தமது வசதிக்கு எற்றவாறு எழுதியிருப்பார்கள். இத்தகைய தகவல்களால் தான் புலிகள் தப்பானவர்கள் என்று அரசாங்கமும் வேற்று இன மக்களும் எண்ணுகின்றார்கள். கேஸ் நடக்கும்போது புலிகள் கூடதாவர்கள் என்று அவர்களுக்கு முன் அழுது காட்டிவிட்டு பின்னார் போராட்டம் என்று தொடங்கினால் என்ன நடக்கும்????

