04-22-2006, 12:33 AM
இராவணன் Wrote:யாழ்பாணத்தில் எடுத்த படங்களையும் போடுங்கள்..
பார்க்க ஆவலாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் படங்களை இலகுவாக எடுக்க முடியவில்லை. அங்கு சூழ்நிலை அப்படி இருக்கின்றது. முக்கிய இடங்களில் எல்லாம் இராவணத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுவும் பலாலி வீதியில் புன்னாலைகட்டுவன் சந்தியில் இருந்து யாழ் நகரப்பகுதிவரை கிட்டத்தட்ட 100 அடிக்கு ஒரு இராணுவத்தினர் வீதிக்கு இரண்டு பக்கமும் மாறி மாறி நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். அது தவிர 2-3 இராணுவத்தினரை கொண்ட சிறு குழுக்கள் வீதியின் இரண்டு பக்கமும் உள்ள மரங்கள், மதில்கள், வேலிகள், சிறுபற்றைகள் பரிசோதித்து கொண்டு போகின்றார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

