04-21-2006, 08:19 PM
[b] [size=18]திருமலை இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட இன்னொரு ஜுலை'83: சிங்கள உண்மைஅறியும் குழு
திருகோணமலையில் ஏப்ரல் 12ஆம் நாளன்று தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலை ஒரு திட்டமிடப்பட்ட சதியே என்று சிங்கள உண்மை அறியும் குழுவினர் அறிவித்துள்ளது.
திருமலை இனப்படுகொலையைத் தொடர்ந்து கொழும்பை மையமாகக் கொண்ட இன்பார்ம், சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய நான்கு சிங்கள அமைப்புகளை உள்ளடக்கிய உண்மை அறியும் குழுவினர் திருகோணமலையில் ஏப்ரல் 16ஆம் நாளன்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
கொழும்பில் வெளியிடப்பட்ட இக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருமலை வன்முறையில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 கடைகள் மற்றும் 100 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் பேர் பாடசாலைகளிலும் வழிபாட்டு இடங்களிலும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
ஏப்ரல் 12ஆம் நாளன்று குண்டு வெடிக்க வைக்கப்பட்டு ஐந்து பேர் கொல்லப்பட்ட உடனே 15 நிமிடத்திலேயே இந்த இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதானது ஒரு திட்டமிட்ட செயலாகவே கருதுகிறோம்.
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடத்தப்பட்ட இனப்படுகொலையைப் போன்றது திருமலை இனப்படுகொலை. திருமலை நகரின் வர்த்தகப் பகுதியில் ஆயுதமேந்திய சிங்களவர்களால் பழிக்குப் பழிவாங்கும் வகையில் தமிழர் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டமையானது மிகவும் துன்பகரமானது.
தமிழர் கடைகள் தீக்கிரையாக்கப்பட்ட போதும் படுகொலை செய்யப்பட்ட போதும் சிறிலங்கா படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்த பலரும் தெரிவித்தனர். வன்முறைகளை சிறிலங்கா அரசாங்கத்தால் தடுக்க முயலவில்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் திருகோணமலை மக்களிடம் கூட்டாக மன்னிப்பு கோருவதுதான் நீண்டகாலத்துக்கு இருதரப்புக்கும் இடையே நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறிலங்கா படையினர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலால் திருகோணமலையில் இரு இனங்களிடையேயான பதற்றம் அதிகரிக்கிறது என்றும் அந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.
puthinam.com