Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடாநாட்டிலிருந்து வன்னிக்கு பொதுமக்கள் இடம்பெயர்வு
#1
குடாநாட்டிலிருந்து வன்னிக்கு பொதுமக்கள் இடம்பெயர்வு
யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் கொலைகள் காரணமாக பொதுமக்கள் பலர் வன்னிக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். வர்த்தக அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் பல்வேறுபட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் குடும்பங்கள் உட்பட பலர் தமது பாதுகாப்புக் கருதி வன்னிக்கு இடம்பெயருகின்றனர்.

குடாநாட்டில் அடிக்கடி இடம்பெற்றுவரும் இராணுவ சுற்றிவளைப்புக்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கடந்த வாரத்தில் தென்மராட்சி வலிகாமம், யாழ்ப்பாணம், அரியாலைபகுதி, கொக்குவில் பகுதிகளில் திடீர் திடீரென சுற்றி வளைப்பு நடத்திய படையினர் வீடுகள், வளவுகள் ஆகியவற்றை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியதோடு குடும்ப விபரங்களையும் பதிவு செய்து சென்றுள்ளனர். அத்துடன் சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்யும் படையினர் அப்பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்கின்றனர். இதன் காரணமாக இளைஞர்கள் பலர் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.
இணைப்பு : newstamilnet.com


http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

Reply


Messages In This Thread
குடாநாட்டிலிருந்து வன்னிக்கு பொதுமக்கள் இடம்பெயர்வு - by கீதா - 04-21-2006, 08:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)