Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
SBS தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பான விவரணம்
#10
இராணுவத்தினருடன் துணை இராணுவக் குழுக்கள்: அம்பலப்படுத்தியது அவுஸ்திரேலிய தொலைக்காட்சி

தென் தமிழீழத்தில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் இராணுவத்தினருடன் துணை இரானுவக் குழுவினர் சேர்ந்தியங்குவதை அம்பலப்படுத்துகிற வீடியோ பதிவை அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியுள்ளது.


அவுஸ்திரேலியாவின் SBS என்ற தொலைக்காட்சி DATELINE என்ற நிகழ்ச்சியில் இதனை ஒளிபரப்பியது.

மட்டக்களப்பில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் செயற்படும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான கருணா குழுவினரது முகாமினது காட்சிகள் வெளியிடப்பட்டன.

அம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட கருணா குழுவினர் உள்ளனர். கருணா குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவரான பிரதீப் என்ற நபரது நேர்காணலும் மேலும் சிலரது நேர்காணலும் அதில் இடம்பெற்றுள்ளன.

வாகரைத் தாக்குதல்களை தாங்களே நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருணா குழுவினது முகாமானது சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இருப்பதாக முகாமை நேரடியாகப் பார்வையிட்ட அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர் தெரிவித்தார்.

கருணா குழுவினரைச் சந்தித்த அந்த ஊடகவியலாளர் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு ஆலோசகர் கோட்டபாய ராஜபக்சவையும் சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், விடுதலைப் புலிகள் தங்களது முகாமை கருணா குழுவின் முகாம் என்று கூறி உங்களுக்கு காட்டியுள்ளனர் எனவும் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கக் கட்டுப்பாட்டில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆர்.பி.ஜி. ரொக்ட்டுக்கள் ஆகியவற்றுடன் கருணா குழு நடமாடியதை தான் பார்த்ததாக கோட்டபாய ராஜபக்சவிடம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர தெரிவித்த போதும் துணை இராணுவக் குழுவினர் கண்டிப்பாக தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இல்லை என்றார் அவர்.

துணை இராணுவக் குழுவினர் தமது கட்டுப்பாட்டில் இயங்கவில்லை என்று அரசாங்கம் மறுத்தாலும் அவர்கள் இயங்குகிறார்கள் என்பதுதான் உண்மை என்றும் அந்த நிகழ்வின் முடிவில் அத்தொலைக்காட்சி ஊடகவியலாளர் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஓல்ப்ஸ்டொட்டிர் ஆகியோரது கருத்துகளும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


-புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:54 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:56 AM
[No subject] - by அருவி - 04-20-2006, 09:33 AM
[No subject] - by iruvizhi - 04-20-2006, 10:14 AM
[No subject] - by அருவி - 04-20-2006, 10:19 AM
[No subject] - by iruvizhi - 04-20-2006, 10:27 AM
[No subject] - by Subiththiran - 04-20-2006, 10:46 AM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 12:43 AM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 03:07 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 03:25 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 04:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)