02-16-2004, 02:37 PM
இலங்கை: தேர்தலில் வென்றால் போர் நிறுத்தம் வாபஸ் மிரட்டுகிறது இனவாத ஜே.வி.பி.
இலங்கைத் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், புலிகளுடன் ரணில் அரசு செய்த போர் நிறுத்தத்தை உடனடியாக விலக்கிக் கொள்வோம் என்று அதிபர் சந்திரிகாவின் கூட்டணிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா மிரட்டியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சந்திரிகாவின் கட்சி, சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந் நிலையில் ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் விமல் வீரவன்ஸா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
விடுதலைப் புலிகளுடன், இலங்கைப் பிரதமர் ரணில் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை இலங்கையின் பாதுகாப்பாக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், புலிகளுடன் செய்யப்பட்ட போர் நிறுத்தத்தை விலக்குவோம்.
நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறு இல்லாத வகையில் புதிய உடன்பாடை மேற்கொள்வோம். இலங்கை அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் செய்யப்பட்ட இந்தியாஇலங்கை அமைதி உடன்பாட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.
:evil: :roll: :evil:
-------------
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>