Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெறவுள்ளது - படைமுகாம்களிற்கு
#1
<b>தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெறவுள்ளது - படைமுகாம்களிற்கு அருகே இருக்க வேண்டாம் - மக்கள் படை வேண்டுகோள்</b>
- பாண்டியன் - வுhரசளனயலஇ 20 யுpசடை 2006 19:54

சிங்கள கூலிப்படைக்கு எதிரான எமது தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள தால், சிங்களப் படைகளுக்கு அருகிலோ அல்லது அவர்களது முகாம்களுக்கு அரு கிலோ இருக்க வேண்டாம் என்பதை தயவாக வேண்டுகின்றோம். இவ்வாறு மட்டு - அம்பாறை மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
(தவறு திருத்தப்பட்டுள்ளது)
எடுத்த சபதம் முடிப்போம் என்ற தலைப்பில் மட்டு அம்பாறை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் வெளியிடப்பட்ட அறி;க்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அந்த அறிக்கையில் மேலும் தெரிவி;க்கப்பட்டுள்ளதாவது:

எமது அன்பான உறவுகளே,

சமாதானத்தின் பால் நாம் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச நம்பகத்தன்மையும் சிங்கள இனவாத அரசினது இனவெறித் தனத்தால் எம் மனங்களில் இருந்து அகன்றிருக்கின்றது.

யுத்த நிறுத்தம், சமாதானம் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு சிங்கள அரசாங்கமும், அவர்களது இராணுவமும் எமது மக்கள் மீது செய்துவருகின்ற கொடுமையான, அரக்கத்தனமான போர் வெறித்தனத்தை இன்னும் பொறுத்துக் கொண்டிருக்க எம்மால் முடியவில்லை.

எமது தமிழ் இனத்தையே அழித்து, ஒழித்து கபட நோக்கத்தோடு சிங்கள அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இதனை அறிந்துகொள்ளாத அப்பாவித் தமிழ் இளைஞர்களை ஏமாற்றி ஆசை வார்த்தை காட்டி எமது தேசத்துக்கே துரோகம் இழைப்பதற்காக துணை இராணுவக் குழுக்கள் என்ற போர்வைக்குள் வைத்திருக்கின்றார்கள்.

இந்த குழுக்களுக்கும் எம்மால் விடுக்கப்படுகின்ற எச்சரிக்கையும், அறிவித்தலுமாகும்.

நீங்கள் தமிழ்த் தேசத்துரோகிகளாக மாறி உங்கள் சொந்த வாழ்க்கையை ரணமாக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எமது அன்பான மக்களே!

சிங்கள கூலிப்படைக்கு எதிரான எமது தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதால், சிங்களப் படைகளுக்கு அருகிலோ அல்லது அவர்களது முகாம்களுக்கு அருகிலோ இருக்கவேண்டாம் என்பதை தயவாக வேண்டுகின்றோம்.

தேசத்தின் நன்மை கருதி எம்மால் எடுக்கப்பட்டிருக்கும் இவ் முடிவு தமிழரின் விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்கும் என நாம் ஆணித்தனமாக நம்புகிறோம்.

விடுதலைப் புலிகளே! உங்களைப் போன்று பொறுமை காக்க எம்மால் முடியாது. அதனால் நாம் வருந்துகின்றோம்.

<b>பொங்கி எழும் மக்கள் படை,
மட்டு அம்பாறை மாவட்டம்.</b>

தகவல்: சங்கதி புள்ளி கோம் www.sankathi.com
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெறவுள்ளது - படைமுகாம்களிற்கு - by iruvizhi - 04-20-2006, 03:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)