Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள
#2
<b>அதிமுக மிரட்டல் பார்வர்ட் பிளாக் வேட்பாளர் தற்கொலை முயற்சி </b>:
<b>மதுரையில் பதட்டம்! </b>
ஏப்ரல் 19, 2006

<i><b>மதுரை:</b>

மதுரை திருமங்கலம் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் செந்தில் அதிமுகவினரின் பயங்கர மிரட்டலால் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மதுரை மற்றும் திருமங்கலத்தில் பரபரப்பு நிலவுகிறது.

முதலில் சந்தானத்துக்காக நடிகர் கார்த்திக்கை கேவலப்படுத்திய அதிமுத தலைமை, இப்போது தேர்தலில் போட்டி மிகவும கடுமையாகிவிட்டதால் பார்வர்ட் பிளாக் கட்சியை கூட்டணிக்குள் இழுக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தனித்துப் போட்டியிட்டால் அவ்ளோ தான் என் கார்த்திக்கையும் அவரது வேட்பாளர்களையும் சினிமா விஐபிக்கள் மூலம் மூலமும் கந்து வட்டி கும்பல்கள் மூலமும் மிரட்டி வருகிறது.

மேலும் உளவுத்துறையை விட்டும் அச்சுறுத்தி வருகிறது. கார்த்திக் ஆதரவு பார்வர்ட் பிளாக் தலைவர் ஒருவரை உளவுப் பிரிவினரே ஜீப்பில் கடத்திச் சென்ற சம்பவமும் நடந்தது.

இது தவிர 3 பார்வர்ட் பிளாக் வேட்பாளர்களை வாகனங்களை ஏற்றிக் கொல்லவும் முயற்சி நடந்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.

சமீபத்தில் ராமநாதபுரம் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் முத்துக்குமார், தன்னை அதிமுகவினர் சிலர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் புகார் மீது போலீசார் ஏறி உட்கார்ந்து அடைகாத்து வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருமங்கலம் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் செந்தில் விஷம் குடித்தும், தூக்குப் போட்டும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

திருமங்கலம் அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரை சில அதிமுகவினர் போட்டியிலிருந்து விலகுமாறும் இல்லாவிட்டால் குடும்பத்தையே காலி செய்வோம் என்றும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால் பயந்து போன செந்தில், தனது வீட்டில் இன்று காலை விஷம் குடித்துள்ளார். பின்னர் தூக்குப் போட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதித்தனர். ஆனால், அவரது நிலைமை மோசமாகவே பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு செந்திலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்திலின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

<b>கார்த்திக்கை 'வளைக்க' முயற்சி</b>:

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை புதன் அல்லது வியாழக்கிழமை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக பார்வர்ட் பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியிருந்தார்.

தென் மாட்டங்களில் பிரசாரத்தைத் தொடங்கி, அதிமுகவின் மிரட்டலாலும் போலீஸ் மிரட்டலாலும் அதை பாதியிலேயே விட்டு விட்டு ஊட்டிக்குப் போய்விட்ட கார்த்திக் அங்குள்ள தனது சொகுசுப் பங்களாவில் ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது நீலகிரி மாவட்டத்தில் பிரசாரத்திலும் ஈடுபடுகிறார்.

கார்த்திக்கின் பிரசாரத்திற்கு ஓரளவு கூட்டமும் வருகிறது. கார்த்திக்கின் மனைவி ராகினி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தோடர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். அவரை ஊட்டியின் மருமகன் என்று நீலகிரி பகுதியில் அழைக்கின்றனர். ஊட்டி வேட்பாளராக அனந்தகுமார் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ராகினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தரப்பிலிருந்தும், காவல்துறையிலிருந்தும் வந்த நெருக்குதல்கள் காரணமாகவே கார்த்திக் மதுரையிலிருந்து இடம் பெயர்ந்து ஊட்டிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக, அதிமுக இடையே 'டப் பைட்' என்று கருத்துக் கணிப்புகள் கூறுவதாலும் உளவுப் பிரிவு எச்சரிப்பதாலும் கார்த்திக் மூலமாக முக்குலத்தோர் வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்கும் முயற்சிகளில் அதிமுக தலைமை தீவிரமாகியுள்ளது.

அவரை ஒரு பக்கம் மிரட்டினாலும் மறு பக்கம் அவரை தாஜா செய்து கூட்டணிக்குள் இழுக்க தீவிரமாக முயன்று வருகிறது அதிமுக.

3 சீட் வரை விட்டுத் தருவதாகவும் தேவைப்பட்ட அளவுக்கு பணமும் தருவதாகவும் அதிமுக தரப்பு கூறி வருகிறது.

இந் நிலையில் ஊட்டியில் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில், நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது கட்சித் தலைமை எடுத்த முடிவு. அதில் மாற்றம் இல்லை.

விரைவில் 77 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விடுவர். ஆண்டிப்பட்டிக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டோம். நான் மாற்று வேட்பாளராக போட்டியிடுகிறேன். நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது கடைசியில் தெரியும்.

அதே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நான் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதை நான் மறுக்கவில்லை.

எனது கட்சி வேட்பாளர்களுக்கு மிரட்டல்கள் தொடருகின்றன. ஆனால் எனக்கு இதுவரை எந்த மிரட்டலும் இல்லை.

நீலகிரி மக்கள் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து அன்பு காட்டுகிறார்கள். நான் அவர்கள் ஜாதியைச் சேர்ந்தவன் இல்லை என்றாலும் கூட என் சமுதாய மக்கள் என்னிடம் எப்படி அன்பு காட்டுவார்களோ அதேபோல இவர்களும் என் மீது நிறைய பாசம் வைத்துள்ளனர் என்றார் கார்த்திக்.

ஆனால், இப்போது அவரது வேட்பாளர் அதிமுகவினரின் மிரட்டல்களால் தற்கொலைக்கு முயன்றுள்ளதால் ஜெயலலிதாவை கார்த்திக் சந்திப்பாரா என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. </i>

<i>நன்றி தற்ஸ்தமிழ்</i>
<i><b> </b>


</i>
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 04-19-2006, 11:47 PM
[No subject] - by Luckyluke - 04-20-2006, 07:03 AM
[No subject] - by Vasampu - 04-22-2006, 10:06 AM
[No subject] - by Subiththiran - 04-22-2006, 10:51 AM
[No subject] - by Raguvaran - 04-23-2006, 08:50 AM
[No subject] - by karu - 04-23-2006, 10:32 AM
[No subject] - by Luckyluke - 04-24-2006, 06:38 AM
[No subject] - by Vasampu - 04-24-2006, 11:29 AM
[No subject] - by Birundan - 04-24-2006, 12:56 PM
[No subject] - by Vasampu - 04-24-2006, 01:07 PM
[No subject] - by Birundan - 04-24-2006, 01:22 PM
[No subject] - by Birundan - 04-24-2006, 01:24 PM
[No subject] - by SUNDHAL - 04-24-2006, 02:06 PM
[No subject] - by தூயவன் - 04-24-2006, 02:18 PM
[No subject] - by SUNDHAL - 04-25-2006, 03:32 AM
[No subject] - by SUNDHAL - 04-25-2006, 03:50 AM
[No subject] - by vaikoo - 04-25-2006, 04:35 AM
[No subject] - by putthan - 04-25-2006, 04:47 AM
[No subject] - by தூயவன் - 04-25-2006, 05:12 AM
[No subject] - by putthan - 04-25-2006, 05:20 AM
[No subject] - by SUNDHAL - 04-25-2006, 11:24 AM
[No subject] - by Luckyluke - 04-25-2006, 11:27 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 01:41 AM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 01:53 AM
[No subject] - by SUNDHAL - 04-26-2006, 03:47 AM
[No subject] - by தூயவன் - 04-26-2006, 04:01 AM
[No subject] - by Aravinthan - 04-26-2006, 05:27 AM
[No subject] - by SUNDHAL - 04-26-2006, 06:06 AM
[No subject] - by SUNDHAL - 04-26-2006, 06:12 AM
[No subject] - by கந்தப்பு - 04-27-2006, 03:39 AM
[No subject] - by Aravinthan - 04-27-2006, 04:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)