Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!!
#15
[b]<span style='font-size:25pt;line-height:100%'>துரோகி கருணாவின் மறுபக்கம் 6

கப்டன் பிரான்சிஸின் தியாக வேட்கையும் கருணாவின் தீயசெயலும்</span>

யார் இந்த பிரான்சிஸ்?
இலட்சியவாழ்வு!
தளர்விளா உறுதி!
தலமைத்துவ விசுவாசம்
வீரம், ஈகை, தியாகம், அர்ப்பணிப்பு

இதுவெல்லாம் நிரம்பப் பெற்றவன்தான் உண்மையான போராளியாகயிருக்க முடியும். இதற்கு தகுதியுள்ளவன்தான் இந்த பிரான்சிஸ். தேசியத் தலைவரின் அன்புக்குரியவன் கேணல் கிட்டுவின் தோழமைக்குரியவன். தூரநோக்குக் கொண்ட தீர்க்க தரிசன ஒரு அரசியல் போராளி என்றே இவனைக் கருதலாம்.


மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு என்னுமிடத்தில் சடாட்சரபவான் என்ற இயற்பெயருடன் பிறந்த இவன் தனது சிறுவயதிலிருந்தே ஆரம்பக் கல்வியில் மிக தேர்ச்சியுள்ளவனாவே இருந்தான்.

இயற்கையாகவே தமிழ்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட இவன் தமிழ் இளைஞர் பேரவையின் ஆதரவாளராகயிருந்தான்.

இக்காலகட்டத்தில் தனது மேற்படிப்பை அம்பாறை காடி தொழில்நுட்பக் கல்லூரியிலும் கொழும்பு கட்டுப்பத்தை தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றான். தனது கல்விக்காலத்தில்கூட மட்டக்களப்பு அரச சிறையிலிருந்த இவன் வாழ்க்கைப்படிகளில் பல சிக்கல்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு நடந்த இந்த இலட்சியவாதிக்கு தான் செல்லும் பாதைக்கும் இலட்சியத்திற்கும் ஊன்றுகோலாக ஆணிவேராகவும், அத்திவாரமாகவும், பக்கபலமாகவும் தன்னை நிலைப்படுத்தி தனது கொள்கையை மேன்படுத்த இலட்சியம் தவறாத ஒரு மாபெரும் சக்தி தேவைப்பட்டது.

ஆம், அந்த மாபெரும் சக்தியான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1982ல் தன்னை இணைத்துக்கொண்டான். இந்த மாவீரனின் இயக்க வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியிலும் சக போராளிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது உண்மையே!

1983இல் பயிற்சிக்குச் செல்லும் போராளிகளுக்கு மட்டு அம்பாறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டான். இவனது இயக்க அரசியல் வகுப்புக்கள் தன்னிகரானது. தனித்துவமானது. இவனது இயக்க அரசியல் போதனையால் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இயக்கத்துக்குள் காலடி எடுத்துவைக்க ஏதுவாகயிருந்தது என்பது மறக்கமுடியாதது.

1983 காலப்பகுதியில் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடந்தது. அதில் இயக்க ஆதரவாளர் நிர்மலாநித்தியானந்தன் அச்சிறையுடைப்பு சம்பந்தப்பட்டவர்களின் திறமையற்ற நடவடிக்கையால் கைவிடப்பட்டார்.
1984இல் மீண்டும் அதை கப்டன் பிரான்சிசும், பசில்காக்காவும் இரண்டு கைத்துப்பாக்கியுடனே இதைச்செயல்படுத்தி நிர்மலாநித்தியானந்தனை மீட்டு பொலநறுவை வழியாக மதவாச்சி சென்று அங்கிருந்து மன்னார் புநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கு பக்குவமாககொண்டு சேர்த்தனர்.

இந் நடவடிக்கையானது அக்காலப் பகுதியில் பெரிய ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது.எனவேதான் அவ்விடயம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

1984 காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம்வரை பிரான்சிஸின் இயக்கவேலைகள் பரந்திருந்தன. அக்காலப் பகுதியில் தேசியத்தலைவரைச் சந்திப்பதும் கேணல் கிட்டுவைச் சந்திப்பதுமாக இவர் இயக்கப்பணியில் வேகமாக ஈடுபட்டான். கேணல் கிட்டுவுடன் சேர்ந்து பல இயக்கப்பணிகளை யாழில் மேற்கொண்டு தலைவரிடத்திலும் நன் மதிப்பைப் பெற்றான்.

மேலும் கேணல் கிட்டுவின் நம்பிக்கையான தோழமைமிக்க அன்புமிக்க போராளியாகவும் கப்டன் பிரான்சிஸ் செயற்பட்டான்.

எனவே தமிழ் தேசியக் கொள்கைகளையும் ஒற்றுமைகளையும் அந்நாட்களிலேயே இவனது பரந்துபட்ட இயக்கப்பணியால் வளர்ச்சிகண்டது என்றும்கூட கூறத்தகுந்துதான்.

அரசியல் பணியில் மட்டுமல்ல எதிரிகள் மீதான முக்கியமானதாக அந்நாட்களில் கருதப்பட்ட பல தாக்குதல்களிலும் கப்டன் பிரான்சிஸின் பங்கிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் சிறிலங்கா பொலிஸ் நிலையத்தாக்குதலான கஞவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தாக்குதல் 1984லும் மற்றும் 1985ல் ஏறாவ+ர் பொலிஸ் நிலையத்தாக்குதல். 1984ல் தம்பட்டையில் மிகப்பெரிய தாக்குதலாக அப்போது பேசப்பட்ட STFஇனர் மீதான பதுங்கித் தாக்குதல் என்பன கப்டன் பிரான்சிஸின் பெயர் சொல்லக்கூடிய தாக்குதலாகயிருந்தது.

பிரான்சிஸின் இந்த இயக்க வளாச்சியையும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் செல்வாக்கையும் எப்படி தகர்த்தெறியலாம். அதற்கு என்னவழிவகை என கருணா என்ன கயவன் கணக்கிட்டான். அதுமட்டுமல்ல பிரான்சிஸிற்கு அருணா கொடுத்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலை எப்படியோ சதிசெய்து பறிக்கவும் திட்டமிட்டான்.

1987இல் இதற்கான செயலில் இறங்கிய கருணா மட்டக்களப்பு அம்பாறையைத் தனித்தனியாக பிரித்து அரசியல் வேலைசெய்யலாம் எனத் திட்டமிட்டான். இவ்விடயமானது அப்போதைய சுழ்நிலையில் சாதகமாகக்கூடிய வேலையல்ல! ஏனெனில் அத்திட்டமிடலானது அந்நாளில் இயக்கப்பணிக்கும் வளர்ச்சிக்கும் குந்தகமானதாகவே அமையும். இதனால் பலனடையப்போவது எதிரிகளும் எதிரிகள் சார்பான அரசியல்வாதிகளுமே என கப்டன் பிரான்சிஸ் அத்திட்டத்தை எதிர்த்தான்.

இதனால் கருணாவுக்கும் பிரான்சிஸிற்கும் கருத்துமுரண்பாடு வலுத்தது. இந் நிலையில் பிரான்சிஸ் தேசியத் தலைவரை நேரடியாகச் சந்தித்து நிலமையை எடுத்துதம்பினான். தேசியத் தலைவரும் கருணாவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை! எனவே பிரான்சிஸ் கூறுவது யதார்த்த ரீதியாகச் சரியானது என்றும் அதேபோல்ச் செய்யும்படி பிரான்சிஸிற்கு கூறினார். இதைக் கருணாவுக்கும் செயற்படுத்துமாறு தலைவர் கட்டளையிட்டார்.

இதனால் மனமுடைந்த கருணாவுக்கு தனது பிரித்தாளும் நடவடிக்கை புஸ்வானமானதையிட்டு பிரான்சிஸின் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. தனது குள்ள நரிப்புத்தியைப் பயன்படுத்தி பல காரணங்கள்கூறி அந்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலைப் பிரான்சிஸிடமிருத்து மிகவும் கபடத்தனமாக அந்த கபடதாரியான கருணா பறித்தெடுத்தான். அந்த பிஸ்டலுக்கு மாற்றீடாக ஒரு பிஸ்டலும் கொடுக்கவில்லை.

1988ல் 10ம் மாதத்தில் 31ம் திகதி பிரான்சிஸின் சொந்த ஊரில் IPKF சுற்றிவளைப்பு நடந்தது. இதில் பிரான்சிஸ் காலில் துப்பாக்கிச் சூடுபட்டு வீடொன்றின் புகைக்கூட்டில் மறைந்துகொண்டான். ஆனால் காலில் பீறிட்ட குருதி எதிரிக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. அந்நிலையால் கயவன் கருணாவின் சதியால் எதிரியை திருப்பிச்சுடுவதற்குகூட பிஸ்டல் இல்லாத நிலையில் சயனைட் அருந்தி அந்த வீரமறவன் தான் பிறந்து வளர்ந்த மண்ணிலே வீரச்சாவையடைந்தான்.

அந்த மண்ணும் பெருமையுடன் அந்த வீரனை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டது.

இறுதி நேரத்தில் கருணா பறித்த அந்த பிஸ்டல் பிரான்சிஸின் கைகளில் இருந்திருந்தால் அந்த மாவீரன் தன்னை தற்பாதுகாத்துக்கொள்ள ஏதுவாகயிருந்திருக்கும் என எல்லோரும் கருதினர்.

எது எப்படியோ! பலகாலம் தனது படிப்பு, பட்டம் என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு தன்னலம் கருதாது நாட்டின் விடுதலையே குறியாககொண்டு இலட்சிவேட்கையுடன் அதுவும் நகர்ப்புறத்தில் எதிரியுடன் அரசியல்போர் செய்த அந்த புலிமறவன் வீரச்சாவையடைந்துவிட்டான்.பலகாலமாக மட்டுநகரில் அரசியல் புயலாக வீசியவன் ஓய்ந்துவிட்டான்.

பிரான்சிஸின் வீரச்சாவுக்கு பின்னர் இயக்க வேலையின் நிமிர்த்தம் கொழும்புசென்ற பிரான்சிஸின் மூத்த சகோதரனான 2ம் லெப்டினன் சரவணபவான் அங்கு வீரச்சாவையடைந்தான்.அவருக்கு அங்கு உதவிக்குச் சென்ற உறவினர் சிலரும் இச்சம்பவத்தில் காணாமல் போனார்கள்.

இந் நிகழ்வானது 1989 IPKF காலத்திலேயே நடந்தது. கப்டன் பிரான்சிஸின் சகோதரர் 2ம் லெப். சரவணபவான் ஆரம்பகாலத்தில் இளைஞர் பேரவையின் உறுப்பினராயிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்டன் பிரான்சிஸின் சாவானது எதிரிக்கும் துரோகிகளுக்கும் கொண்டாட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான் ஆனால் கயவன் கருணாவின் நயவஞ்சகமான மனம் பல தடவை குதுகலத்தால் மத்தளமிட்டதை எவரும் அறிந்திடவோ புரிந்திடவோ சந்தர்ப்பம் இல்லை என்பது உண்மைதான்.

இச்சம்பவத்தால் பல பேர் வெறுப்படைந்து கருணாமேல் கோபமாயிருந்தாலும் பிரான்சிஸிற்கு கருணா செய்த வஞ்சகத்தன்மையை வெளிப்படையாக அந் நாட்களில் விமர்சித்தவர்களில் மேஜர் அன்ரனியும், றம்போ பிரசாத்துமாகும்.

இவர்களுக்கு கருணா செய்த சதி என்ன?

கெடுதல் செயல்கள் என்ன என்று பின்வரும் தொடர்களில் எழுதுகி;ன்றேன்.....

(தொடரும்...)

நன்றி.
http://tamilnews.tamilmedia.dk/content/view/1466/61/
Reply


Messages In This Thread
[No subject] - by I.V.Sasi - 03-29-2006, 03:59 PM
[No subject] - by I.V.Sasi - 03-29-2006, 04:03 PM
[No subject] - by I.V.Sasi - 04-02-2006, 09:40 PM
[No subject] - by I.V.Sasi - 04-02-2006, 10:09 PM
[No subject] - by Birundan - 04-02-2006, 10:40 PM
[No subject] - by கந்தப்பு - 04-03-2006, 03:43 AM
[No subject] - by I.V.Sasi - 04-03-2006, 10:15 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 05:09 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 09:56 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 09:58 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:00 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:09 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:12 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:14 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:16 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:21 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:42 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:43 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:44 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:45 AM
[No subject] - by வர்ணன் - 04-20-2006, 03:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)