Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொடரும் படுகொலைகள்!!!
#17
<b>புத்து}ரில் ஐந்து அப்பாவி பொதுமக்கள் படையினரால் படுகொலை!!!!! </b>

யாழ். மாவட்டம், புத்து}ர் வாதரவத்தைப் பகுதியில் நேற்றிரவு சிறீலங்கா இராணுவத்தின ரால் ஐந்து அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாநாகரசபை அதிகாரி, மின்உபகரண திருத்துனர், விவசாயி மற்றும் இரு முச்சக்கர வண்டி ஓட்டு னர்கள் ஆகியோரே படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு சுகவீனமுற்றிருந்த உறவினர் ஒருவரை அவரது வீட்டில் விட்டுவிட்டு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வர் இரவு 10.30 மணியளவில் படையினரால் மறிக்கப்பட்டு 51-1 படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களை காணாததால் அப்பகுதியால் தேடிச் சென்ற மற்றொரு முச்சக்கர வண்டியின் ஓட்டுனரும் படையினரால் மறிக்கப்பட்டு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் இவர்கள் ஐவரையும் படைமுகாமிற்கு அருகேயுள்ள தரவை வெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்ற படையினர் அவர்களை ஓடுமாறு பணித்துள்ளனர். இதனையடுத்து ஓடிய ஐவர் மீதும் பின்னே நின்ற இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிச் பிரயோகம் செய்துள்ளனர். படையினரின் துப்பாக்கிச் சூட்டினால் சம்பவ இடத்திலேயே ஐவரும் உயிரிழந்துள்ளனர்.

மாநகரசபை அதிகாரி கந்தசாமி கௌரிபாலன்(32), முச்சக்கர வண்டி ஓட்டுனர் பாலசுப்பிரணியம் கண்ணதாசன்(27), மின்உபகர திருத்துனர் செல்லப்பபு கமலதாசன்(25), விவசாயி மகாதேவன் கிசோர் குமார்(20) ஆகியோரும் அவர்களை காணாது தேடிச் சென்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர் தங்கராசா ரவீந்திரன் ஆகியோரே படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் மூவரின் சடலங்கள் ஒரே இடத்திலும் மற்றைய இருவரின் சடலங்கள் 200 மீற்றர் து}ரத்திலும் கிடந்துள்ளன.

படையினரின் இந்த வெறிச்செயலால் புத்து}ர் பகுதி மக்கள் கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளனர். அப்பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது

தகவல்:சங்கதி
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by தூயவன் - 04-13-2006, 03:51 AM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 03:54 AM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 04:24 AM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 05:32 AM
[No subject] - by கந்தப்பு - 04-13-2006, 05:36 AM
[No subject] - by sri - 04-13-2006, 08:13 AM
[No subject] - by Vaanampaadi - 04-13-2006, 10:04 AM
[No subject] - by sri - 04-13-2006, 10:30 AM
[No subject] - by தூயவன் - 04-15-2006, 03:41 AM
[No subject] - by தூயவன் - 04-15-2006, 02:08 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 01:09 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 01:11 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 01:12 PM
[No subject] - by தூயவன் - 04-19-2006, 04:53 AM
[No subject] - by தூயவன் - 04-19-2006, 04:58 AM
[No subject] - by தூயவன் - 04-19-2006, 05:17 AM
[No subject] - by தூயவன் - 04-19-2006, 05:22 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 05:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)