04-19-2006, 04:53 AM
<b>புளியங்குளத்தில் வேட்டைக்குச் சென்ற மூவர் படையினரால் படுகொலை </b>
வவுனியா மாவட்டம், புளியங்குளம், பெரியமடு காட்டிற்குள் வேட்டைக்குச் சென்ற மூன்று பொது மக்கள், அங்கு ஊடுருவிய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களிற்கு முன்னர் தமது நான்கு நாய்களுடன் வேட்டைக்குச் சென்ற இவர் கள் வீடு திரும்பாதமையினால், உறவினர்களால் விடுதலைப் புலிகளிடமும், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மூவரது சடலங்களிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும், அவர்களில் ஒருவரது கழுத்தில் வெட்டுக்காயமும் காணப்பட்டிருந்தது. மூவரது முகத்திலும் திராவகம் ஊற்றப்பட்டதினால் முகங்கள் கருகிய நிலையில் காணப்படுகின்றன.
பெரியமடுப் பகுதியைச் சேர்ந்த தியாகராசா குகனேஸ்வரன்(36), சிவசம்பு நகுலேந்திரராசா(44) மற்றும் சிவகுரு திரவியன்(32) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களை சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரே படுகொலை செய்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 14ம் நாள் கறுப்பு உடையில் ஐந்து படையினர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் சென்றைதையும் தாம் கண்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்:சங்கதி

[size=14] ' '