Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அங்கு நானிருப்பேன்!
#1
<b>மொட்டென முகம் மூடியிருந்தேன்.............
கிளி - கொத்தாதவொரு கொவ்வை பழமாய்.........
என் பாட்டில் நானிருந்தேன்!

சட்டென்று கடந்தது ஒரு -மைனா.....
பட்டென்று முழைத்தது - காதல்!

எழுத்துகூட்டி தமிழ் படித்தவன்
ஒரே இரவில் கவிஞன் என்றானேன்!
இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி.....
இனி என் இயங்கு திசை எங்கும் ..........
அவள் ஆட்சி!

ஆயுள் ரேகை உண்டென்று..........
உலகம் ஆயிரம் சொல்லும்......
ஆளவந்தாள் என்னை - இனி
அவளே என் ஆயுளுக்கு நீதிபதி!

பாடல் கேட்க பிடிக்குது......
சித்ரா பாடியது அதுவென்று தெரிந்தும்........
என் சித்திரம் பாடுதென்று ........
திருட்டு கனவு வருது!

போச்சு போச்சு................
இனி என்ன செய்ய நான்?

ஊர் உறங்கும் நேரமதில்........
நீயும் உறங்கியிருப்பாய்.......
விழித்திருக்கும் என் ஆன்மா.......
உன் வீதியுலா வலம் வருமே.....

விளங்கி கொண்டதுண்டா- நீ?
நிசப்தத்தை கிழிக்கும் என் ஜீவனின் அலறல்.......
உந்தன் நீள்தூக்கத்தை -கலைத்ததுண்டா?

இல்லை என்றிடாதே........
விழித்தெழுந்தபின்........
விழிகளை மீண்டும் மூடு.........
உன் நாடி துடிப்பை மெதுவாய் கேள்......
அங்கு நானிருப்பேன் அன்பே!</b>
-!
!
Reply


Messages In This Thread
அங்கு நானிருப்பேன்! - by வர்ணன் - 04-19-2006, 02:35 AM
[No subject] - by Thala - 04-20-2006, 07:50 PM
[No subject] - by வினித் - 04-20-2006, 08:55 PM
[No subject] - by gowrybalan - 04-20-2006, 09:01 PM
[No subject] - by tamilini - 04-20-2006, 09:02 PM
[No subject] - by Sujeenthan - 04-20-2006, 09:03 PM
[No subject] - by வர்ணன் - 04-21-2006, 03:37 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 03:41 AM
[No subject] - by வர்ணன் - 04-21-2006, 03:44 AM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 05:36 AM
[No subject] - by தூயா - 04-21-2006, 09:21 AM
[No subject] - by Thala - 04-21-2006, 09:39 AM
[No subject] - by Thala - 04-21-2006, 09:41 AM
[No subject] - by Vishnu - 04-21-2006, 09:47 AM
[No subject] - by கீதா - 04-21-2006, 07:31 PM
[No subject] - by Subiththiran - 04-21-2006, 07:46 PM
[No subject] - by RaMa - 04-22-2006, 04:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)