04-18-2006, 09:47 PM
முடிவு நெருங்குகிறது!
நேற்று மட்டக்களிப்பு கிரான் பகுதியில் உள்ள பெண்டகள் சேனை கிராமத்தில் கருணா குழு மேற்கொண்ட தாக்குதல் முயற்சி விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் விசேட உந்துருளிப் படையணி மேற்கொண்ட இத் தாக்குதலில் மூன்று கருணா குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐந்து தினங்களுக்கு முன்னர் வாகனேரிப் பகுதியில் இதே குழுவினரே விடுதலைப்புலிகள் மீது தாக்குதலை மேற்கொணடனர். இத் தாக்குதலில் ஒரு போராளி வீரச் சாவடைந்தார்.
இது நாள் வரை கருணா குழுவின் ஊடுருவித் தாக்குதல்கள் ஓரளவு வெற்றியை அவர்களுக்கு அளித்து வந்தன. சிறிலங்கா இராணுவத்தின் வழிகாட்டலுடன் வரும் கருணா குழுவினர் திடீர் தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு அருகில் உள்ள இராணுவ முகாம்களுக்குள் பதுங்கிக் கொண்டனர். ஆனால் இன்று அவ்வாறு இல்லாமல், ஒரு ஊடுருவித் தாக்கும் அணி விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தென்தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் விசேட உந்துருளிப் படையணி மேற்கொண்ட முதலாவது தாக்குதலாகவும் இது அமைகின்றது. மிக வேகமாக செயற்படக்கூடிய விடுதலைப்புலிகளின் விசேட உந்துருளிப் படையணி கருணா குழுவின் தாக்குதல்களை முறியடிக்கும் பணியை செய்கின்ற பொழுது, கருணா குழுவினால் முன்பு போல் ஊடுருவித் தாக்குதல்களை செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆகவே விரைவில் சிறிலங்கா புலனாய்வுத்துறையும் கருணா குழுவும் இணைந்து செய்கின்ற தாக்குதல்கள் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
கருணா குழுவின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதால், விடயம் அத்துடன் முடிந்து விட்டது. ஆனால் அவ்வாறு இல்லாமல், ஊடுருவியவர்களின் நோக்கம் நிறைவேறி இருந்தால் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கும். ஒருபுறம் விடுதலைப்புலிகளை தாக்குவதற்கு கருணா குழுவை அனுப்பிக்கொண்டு, மறுபுறம் விடுதலைப்புலிகள் தனியார் விமானத்தை தமது வன்னிக்கான பிரயாணத்திற்கு பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை அடுத்து நோர்வேயின் விசேட தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் விழுந்தடித்து சிறிலங்காவிற்கு ஓடி வந்திருக்கிறார். விடுதலைப்புலிகளை இந்த திட்டத்திற்கு இணங்கும்படி ஜோன் ஹன்சன் வற்புறுத்த உள்ளார். ஆனால் இதில் சிறிலங்கா அரசின் சதித் திட்டம் ஏதாவது உள்ளதா என்பதை விடுதலைப்புலிகள் மிகக் கவனமாக ஆராய்தே முடிவு எதனையும் எடுப்பார்கள். இந்தத் திட்டத்தை விடுதலைப்புலிகள் நிராகரிப்பதற்கு வலுவான கராணங்கள் உண்டு. அவ்வாறு நிராகரித்தால் பேச்சுவார்த்தை என்பது சாத்தியமற்ற ஒன்றாக போய்விடும். அத்தோடு தமிழினத்தை தொடர்ந்து அழிக்க வகை செய்கின்ற இந்த அர்த்தமற்ற சமாதானத்திற்கும் முடிவு நெருங்கி வரும.; நாளை ஜோன் ஹன்சனை சந்தித்த பிறகு சுப.தமிழ்செல்வன் அறிவிக்கப் போகும் செய்தியிலேயே அனைத்தும் தங்கி உள்ளது.
நன்றி www.webeelam.com