Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒட்டுப்படை மீது புலிகள் பதில் தாக்குதல் - மூவர் பலி,
#2
[size=18]முஸ்லீம் புலனாய்வு அதிகாரி கலீல் வழிநடத்தலில் கருணா குழுவின் வன்முறை நடவடிக்கைகள்:


மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாகுழுவினர் மேற்கொள்ளும் வன்முறை நடவடிக்கைகளுக்கு தே வையான ஆயுதங்கள் வழங்குவது மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் என்பவற்றை சிறிலங்கா உளவுப்பிரிவு அதிகரியான கலீல் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் குற்றம் சாட்டியுள்ளார். பெணடு;கள்சேனை - வாகனேரிப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற கருணாகுழுவினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலையடுத்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட கருணாகுழு உறுப்பினர் மேற்கண்ட தகவலை விசாரணையின் போது தெரிவித்ததாகவும் தயாமோகன் குறிப்பிட்டார்.

இராணுவ ஊளவாளியான கலீல் சுரேஸ் என்ற புனை பெயரில் நடமாடுவதாகவும் மட்டக்களப்பு பற் பொடி கொம்பனியில் இருந்து செயற் படும் இவர் கருணாகுழுவுக்கு தேவை யான ஆயுதங்களை ஜெனீவாப் பேச் சுக்கு பின்னர் கூட வழங்கியிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட கருணா குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பயன்படுத்தும் பி.கே.எல்.எம்.ஜி .ரக ஆயுதம் மற்றும் கிளேமோர் கைக்குண்டுகள் என்பவற்றை இராணுவப் புலனாய்வு அதிகாரி கலீல் கருணாகுழுவுக்கு வழங்கியதாகவும் கருணாகுழுவுக்கு இராணுவத்தினருக்குமுள்ள தொடர்புகள் குறித்து பல தரப்பட்ட விடயங்களை மேற்படி நபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளதாகவும் தயா மோகன் கூறுகினார்.

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
Reply


Messages In This Thread
[No subject] - by Subiththiran - 04-18-2006, 09:11 PM
[No subject] - by Ilayathambi - 04-18-2006, 09:47 PM
[No subject] - by வர்ணன் - 04-18-2006, 10:29 PM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 12:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)