Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.
#44
<b>ஜெவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் சரத்: ராதிகாசரத்துக்கு கருணாநிதி 'வாழ்த்து' </b>
ஏப்ரல் 17இ 2006

<b>தேனி:</b>

திமுகவிலிருந்து விலகியுள்ள நடிகர் சரத்குமார் இன்று முதல்வர் ஜெயலலிதாவை தேனியில் வைத்து சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருடன் ராதிகாவும் அதிமுகவில் இணைந்தார்.

திமுக வழங்கிய அதிமுக எம்பி பதவியையும் சரத்குமார் ராஜினாமா செய்தார்.

திமுகவில் அடிமைகள்தான் தேவைப்படுகிறார்கள் கருணாநிதிக்கு நெருக்கமானவர்களால் தானும் தனது மனைவியும் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டோம். ஆனால் கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி சரத்குமார் சமீபத்தில் திமுகவிலிருந்து விலகினார்.

இதையடுத்து அவரது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது தெரியாமல் இருந்து வருகிறது.

குமாருக்கு ரூ. 20 கோடி வரை கடன் இருப்பதாகவும் அதை சமாளிக்க உதவினால் அதிமுக பக்கம் அவர் போகக் கூடும் என்றும் கூறப்பட்டது. சரத்குமாரை அதிமுவில் இணைய வைக்க தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கையின் அதிபர் தீவிரமாக முயன்று வந்தார்.

இந் நிலையில் ராதிகாவுடன் சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் சென்ற சரத்குமார் அங்கு ராடன் டிவி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

அதே நேரத்தில் நடராஜனும் சிங்கப்பூர் சென்றதாகத் தெரிகிறது. சிங்கப்பூரில் வைத்து சரத் ராதிகாவுடன் பேசிய நடராஜன் சரத்குமார் தரப்பின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக வந்த கருத்துக் கணிப்பைத் தொடர்ந்தே சரத்தின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்கவும் அவரை அதிமுகவுக்கு இழுக்கவும் கடந்த இரு நாட்களாக தீவிர முயற்சிகள் நடந்துள்ளன.

இந் நிலையில் இன்று காலை சென்னை திரும்பிய ராதிகாவும் சரத்குமாரும் விமானம் மூலம் மதுரை வந்தனர்.

சங்கம் ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் இன்று காலை சுமார் 100 கார்களில் தனது ரசிகர் மன்றத்தினருடன் தேனி சென்றார் சரத்குமார். ராதிகாவுடன் ஒரு காரை சரத்குமாரே ஓட்டிச் சென்றார்.

தேனி என்டிஆர் நகரில் பங்களாவில் தங்கியுள்ள ஜெயலலிதாவை சரத்தும் ராதிகாவும் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.

திமுக வழங்கிய ராஜ்யசபா எம்பி பதவியையும் குமார் ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பி வைத்தார்.

ஜெயலலிதாவை சந்திக்க மதுரை ஹோட்டலில் இருந்து புறப்பட்ட சரத்குமார் லைட் கிரீன் ஷேட் கொண்ட சட்டையை அணிந்திருந்தார். ராதிகாவும் பச்சை கலந்த சேலை அணிந்து கிளம்பினார். ஆனால் தேனிக்கு வந்தபோது வெள்ளை சட்டைக்கு மாறியிருந்தார்.

ஜெயலலிதாவுக்கு பச்சை சால்வையை அணிவித்து அதிமுகவில் இணைந்தார் குமார்.

நல்ல காலம் பிறக்க இணைந்தேன்:

அதிமுகவில் இணைந்த பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் தமிழகம் சிறந்து விளங்கும். தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்பதால்தான் அதிமுகவில் இணைந்தேன். நன்கு சிந்தித்து ஆலோசனை செய்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் நான் பேசும்போது கடைசி வரை திமுகவில்தான் இருப்பேன் எனது இறுதிச் சடங்கின்போது எனது உடலில் திமுக கொடிதான் போர்த்தப்பட வேண்டும் என்று பேசினேன். அதை மறுக்கவில்லை. அது உண்மைதான்.

ஆனால் அதன் பிறகு எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் வந்தன. ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். திமுகவில் எத்தனையோ முன்னோடிகள் இருந்தாலும் அவர்களது பேச்சுக்கு மதிப்பு இல்லை எடுபடுவதில்லை.

இப்போது வந்து சேர்ந்தவர்களுக்குத்தான் அங்கு மதிப்பு உள்ளது. இந் நிலையில்தான் நான் அதிமுகவில் இணைந்தேன். எனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்து விட்டேன். தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். இதற்காக நான் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன். பிரசாரத்தில் ராதிகா கலந்து கொள்ள மாட்டார்.

எனது பிரசாரத்தின்போது திமுகவின் குடும்ப அரசியல் குறித்து விரிவாகப் பேசுவேன்.

<i>நான் அதிமுகவில் இணைந்து விட்டதால் ராதிகாவின் டிவி தொடர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என நினைக்கவில்லை. சன் டிவி ஒரு தனி நிறுவனம் அதேபோல ராடான் டிவி நிறுவனமும் ஒரு தனி நிறுவனம். எனவே இப்போதைக்குப் பிரச்சினை வராது என்று நம்புகிறோம் என்றார் சரத்குமார்.</i>

<b>வாழ்த்துக்கள்:</b>
<b>கருணாநிதி </b>
அதிமுகவில் சேர்ந்துள்ள சரத்குமாருக்கு அவருடன் சென்றுள்ள ராதிகாவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி.

அப்போது சரத்குமார் விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது சரத்குமார் தனது கடந்த காலத்தை அசைபோட்டு நிகழ்காலத்தை நிழல் படமாக்கி வருங்காலத்தில் வளமோடு வாழட்டும் என்று வாழ்த்துகிறேன்.

ராதிகாவும் சரத்குமாரோடு சென்றிருப்பதாக கூறப்படுவது உண்மையாக இருந்தால் (கருணாநதி பேட்டி கொடுத்தபோது சரத்குமார் தேனிக்குச் சென்று கொண்டிருந்தார்) அவருக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

சரத்குமார் தனது எம்.பி பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டார் என்றார்.

எதற்காக குமார் விலகியிருக்கிறார் என்று நிருபர்கள் கேட்டதற்கு எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் சொல்கிறேன் அது கடவுளுக்கே வெளிச்சம் என்றார்.

தொடர்ந்து கருணாநிதி பேசுகையில் தரிசு நிலம் கொடுக்க அரசிடம் நிலம் இல்லை என்று வைகோ கூறியுள்ளார். ஆனால் மதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 86 லட்சம் ஏழை விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இது குறித்து வைகோ விளக்கமளிக்க வேண்டும்.

தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு சோனியா காந்தி வருகிறார். காங்கிரஸுடன் கலந்து பேசி அவரசு பிரசார சுற்றுப் பயணத்தை முடிவு செய்வோம். ராகுல்காந்திஇ பிரியங்கா வருகிறார்களா என்பது தெரியவில்லை என்றார் கருணாநிதி.

இதற்கிடையே அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளை கார்த்திக் பிரிப்பதைத் தவிர்க்க சரத்குமார் மூலமாக அவரை வளைக்கும் வேலைகளிலும் அதிமுக தீவிரமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நன்றி தற்ஸ்தமிழ்
http://thatstamil.oneindia.in/news/2006/04.../17/sarath.html
<i><b> </b>


</i>
Reply


Messages In This Thread
[No subject] - by Subiththiran - 04-17-2006, 12:52 PM
[No subject] - by Mathuran - 04-17-2006, 01:06 PM
[No subject] - by AJeevan - 04-17-2006, 01:15 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 01:31 PM
[No subject] - by Thala - 04-17-2006, 01:55 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 01:57 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:04 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:06 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:10 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:13 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:16 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:19 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:24 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 02:43 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:46 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:49 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:49 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:50 PM
[No subject] - by Subiththiran - 04-17-2006, 02:53 PM
[No subject] - by Thala - 04-17-2006, 03:00 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 03:02 PM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 03:27 PM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 03:31 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 03:31 PM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 03:35 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 03:37 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 03:38 PM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 03:40 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 03:42 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 03:44 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 03:44 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 03:47 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 03:48 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 04:08 PM
[No subject] - by tamilini - 04-17-2006, 07:07 PM
[No subject] - by நேசன் - 04-17-2006, 09:30 PM
[No subject] - by Subiththiran - 04-17-2006, 10:48 PM
[No subject] - by கந்தப்பு - 04-18-2006, 12:09 AM
[No subject] - by தூயா - 04-18-2006, 12:37 AM
[No subject] - by கந்தப்பு - 04-18-2006, 12:39 AM
[No subject] - by தூயா - 04-18-2006, 12:47 AM
[No subject] - by கந்தப்பு - 04-18-2006, 01:01 AM
[No subject] - by Vasampu - 04-18-2006, 01:10 AM
[No subject] - by paandiyan - 04-18-2006, 01:45 AM
[No subject] - by தூயவன் - 04-18-2006, 04:29 AM
[No subject] - by தூயவன் - 04-18-2006, 04:31 AM
[No subject] - by தூயவன் - 04-18-2006, 04:33 AM
[No subject] - by Vasampu - 04-18-2006, 12:41 PM
[No subject] - by Vasampu - 04-18-2006, 02:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)