Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லீ குவான்
#1
சிறீலங்காவின் அரசியல் தலைவர்கள் பற்றி சிங்கப்புூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யுூ
தனது நூல் மூலம் கூறியவை.



1956 ஆம் ஆண்டு லண்டனுக்குப் போகும் வழியில் எனது பிரயாணத்தை இடைநிறுத்தி சிறீலங்காவுக்கு (அப்போது சிலோன் என்று பெயர்) முதன் முறையாகச் சென்றேன். அதே வருடம் சிறீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் சொலமன் வெஸ்ற்றிஜ்வே பண்டாரநாயக்கா பொதுத்தேர்தலில் வெற்றியடைந்து தனது நாட்டின் பிரதமரானார். சிங்களத்தை தேசிய மொழியாகவும், புத்த மதத்தை தேசிய மதமாக வும் உயர்த்துவேனென்று அவர் தேர்தல் வாக் குறுதி அளித்திருந்தார்.

பண்டாரநாயக்கா ஒரு அசல் பழுப்பு நிற வெள்ளைக்காரன், ஆங்கிலக்கல்வி பெற்றவர். கிறீஸ்தவராகப் பிறந்தவர். பின்பு சுதேசியாக மாறி புத்த மதத்தைத் தழுவியவர். சிங்கள மொழிவெறியராகவும் அவர் மாறிவிட்டார். சிலோனின் சீரழிவு இப்படித்தான் ஆரம்பித் தது. டாம்பீகமாக ஆங்கில உடையணிந்த, உயரத்தில் குறைந்தவரான இந்த மனிதர் நன்றாகப் பேசுவார். சிலோனை ஒரு சிங்கள மக்களுக்குரிய நாடாக மாற்றுவேன் என்ற வாக்குறுதியுடன் அவர் தேர்தலில் வெற்றியைப் பெற்றார்.
பிரிட்டிசாரின் வாழ்க்கைமுறை, அவர்களைப் போன்ற நடையுடை போன்ற அடையாளங் களுடன் உலாவிய மேட்டுக் குடியினருக்கு எதிரான புரட்சியாக அவருடைய குரல் ஒலித் தது. பண்டாரநாயக்காவினால் தோல்வி யுறச் செய்யப்பட்ட பிரதமர் சேர் ஜோன் கொத்லா வலை ஒவ வொரு காலையும் குதிரை ஏற்றம் செய்வார். யாழ்ப்பாணத் தமிழர்களும் பிற சிறுபான்மையினரும் பின் நிலைக்குத் தள்ளப் படுவார்கள் என்பது பற்றி தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவந்த பண்டாரநாயக்கா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
புத்தமதம் தேசிய மதமாக்கப்படுவதால் இந்து மதத் தமிழர்கள், இஸ்லாம்மத முஸ்லீம்கள், கிறீஸ்தவ மத பறங்கியர்கள் கலவரம் அடைவாh கள் என்பது பற்றியும் அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒக்ஸ்போட் பல் கலைக்கழகத்தின் ஒக்ஸ்போட் யுூனியன் மா ணவர் சங்கத்திற்கு அவர் தலைவராக பதவி வகித்தவர். இந்தச் சங்கத்தில் நடக்கும் விவா தங்களில் பங்கெடுத்துப் பேசுவதுபோல அவர் பின்பு வாதிடுவது வழமை.
மூன்று வருடங்களுக்குப்பின் ஒரு புத்த துறவி யால் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியுறச்செய்தது. புத்த மதத்தை தேசிய மதமாக்கும் வேகம் போதாது என்ற காரணத்திற்காக அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று நான் நினைத்தேன். விதி இப்படியம் விளையாடுமோ என்று வியப் படைந்தேன். அவருடைய மரணத்தைத் தொடர் ந்து நடந்த பொதுத்தேர்தலில் அவருடைய மனைவி தனது கண்ணீரை மூலதனமாக்கி வெற்றிபெற்றார். கணவருக்கு நிகரான வாய் வீச்சு இல்லாவிட்டாலும் மிகவும் உறுதியான மனப்போக்கு உடையவராக இப்பெண் காணப் பட்டார்.

1970 ஆகஸ்ட் மாதத்தில் அவரை நான் நேரில் சந்தித்தேன். அவர் அணிசேராக் கொள்கை யில் இறுக்கமான பற்று உடையவராகக் காணப்பட்டார். தென் வியட்நாமில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் யாவும் வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர் தலைமை தாங்கிய சிலோன் எடுத்தது. இந்து மாகடல் அணுஆயுதம் இல்லாப் பிராந்திய மாக நிலவவேண்டும் என்பதும் அவருடைய நிலைப்பாடாக இருந்தது. அத்தோடு இப்பிராந் தியம் வல்லரசுகளின் பிரசன்னமற்றதாகவும் இருக்கவேண்டும் என்பதையும் சிலோன் வலி யுறுத்தியது.
இளவயதினனாகிய நான் அவருக்கு மிகவும் பொறுமையாக சிங்கப்புூரின் வெளியுறவுக் கொள்கையை விளக்கிக் கூறினேன். தென் வியட்நாம் வீழ்ச்சியுறும் பட்சத்தில் சிங்கப்புூர் ஆபத்துக்களை எதிர்நோக்கும் என்பதை அவ ருக்கு எடுத்துச் சொன்னேன். லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடு களுக்கும் ஆபத்துக்கள் தோன்றலாம் என் பதையும் கூறிவைத்தேன். தூரத்தில் இருந்த வாறு அவர் கடைப்பிடிக்கும் இலட்சியங்கள் சிங்கப்புூர் போன்ற நாடுகளுக்கு பயன்தர மாட்டா என்பதை நான் வலியுறுத்தினேன். இப்பிராந்தியத்தில் காணப்படும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் காலப்போக்கில் தமது கடற்படையை விரிவுபடுத்தும் என்பதை எமது வெளியுறவுக் கொள்கை எதிர்பார்க்கின்றது.
பிரித்தானியா தலைமையில் இயங்கிய பொது நலவாய நாடுகள் கூட்டமைப்பில் சிலோன் ஒரு உன்னத ஸ்தானத்தை வகித்தது. சுதந்தி ரத்தை நோக்கிய பாதையில் சிலோன் மிகவும் கவனமாக வளர்க்கப்பட்டது. இரண்டாம் உல கப்போர் முடிந்த காலத்தில் 10 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நடுத்தர நாடாக சிலோன் விளங்கியது. திருப்தி கரமான உயர்தரக் கல்வி வழங்கும் இரு பல்கலைக்கழகங்களும் அங்கு காணப்பட்டன. பொதுவாக சிலோன் மக்கள் நல்ல கல்வியறிவு உள்ளவர்களாக இருந்தனர்.
உள்நாட்டு மக்களைக்கொண்ட நிர்வாக சேவை ஆட்சியாளர்களுக்கு உதவியது. பிரதி நிதித்துவ அரசுமுறை அனுபவம், சுதந்திரம் அடைவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே சிலோன் மக்களுக்குக் கிடைத்துள்ளது. தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் அவர்கள் தேர்தல்களைச் சந்தித்துள்ளனர். 1930களில் மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்கள் அங்கு ஆரம்பித்தன. படிமுறை வளர்ச்சிப்பாதையில் காலடி பதித்து 1948இல் சுதந்திரம் பெற்ற போது பிறநாடுகள் சிலோனை உதாரண மாகப் பின்பற்றும் அளவிற்கு அதனுடைய முன்னேற்றம் காணப்பட்டது.
அந்தோ பரிதாபம் அது சரிவரவில்லை, தவறிவிட்டது. பலதடவை சிலோனுக்கு வந்தபோ தெல்லாம் ஒரு முன்னுக்கு வரவேண்டிய நாடு வீணடிக்கப்படுவதை நான் பார்க்க முடிந்தது. ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற சனநாயகம் ஒரு அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறி யதை நான் கண்ணுற்றேன். எட்டு மில்லியன் சிங்களவர்கள் தமது பெரும்பான்மை வாக்களிப்பு மூலம் இரண்டு மில்லியன் எண்ணிக்கையிற் குறைந்த தமிழர்களைத் தோற்கடிக்க சனநாயகம் வகைசெய்தது.
அரசகரும மொழியாக ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களம் இருத்தப்பட்டபின் தமிழர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்தனர். தேசிய மதமாக புத்தமதம் கொண்டுவரப்பட்டதால் இந்துத் தமிழர்கள் கசப்படைந்தனர். ஒக்ரோபர் 1966இல் லண்டனில் நடந்த பிரதம மந்திரிகள் மாநாட்டில் பங்குபற்றிவிட்டு சிங்கப்புூர் திரும்பும் வழியில் கொழும்பு வந்தேன். அப்போது சிலோன் பிரதமராக டட்லி சேனநாயக்கா பதவி வகித்தார். அவர் வயது வந்த மனிதராகவும் வீணில் பழிபோடும் இயல்பு உடையவராகவும் காணப்பட்டார்.
எனக்குத் தரப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் சிலோனுக்கு நடந்ததைத் தவிர்க்கமுடியாது என்று ஒரு மூத்த சிங்கள விருந்தினர் எனக்கு விளக்கிக்கூறினார். தேர்தலின் பெறுபேறுகள்தான் இத்த னை குழப்பத்திற்கும் காரணம் என்று அவர் சொன்னார். ஆட்சி செய்யும் இனமாக சிங்களவர்கள் இருக்க விரும்புகிறார்கள். பிரிட்டிசாரின் வாரிசுகளாக மேலாதிக்க நிலையில் இருக்க ஆவலாக உள்ளனர். மூத்த நிர்வாக அதிகாரிகளாக பிரிட்டிசாரின் கீழ் இருந்த தமிழர்களைத் தள்ளிவிட்டு தாமே நிர்வாகஞ்செய்ய ஆர்வமாக உள்ளனர்.
சிங்களத்தை அரசகரும மொழியாக்கி அவர்கள் படும் துன்பத்தை என்னால் உணரமுடிகின்றது. இதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிகப்பெரியது. பாடநூல்கள், நிர்வாக விதிமுறைகள், கோப் புக்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் இருந்து சிங்களம், தமிழ் ஆகியவற்றிற்கு மொழிமாற்றம் செய்கிறார்கள். இதற்கு அவர்கள் செலவிடும் நேரமும், பணமும் வீண்விரயமாக்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில் மூன்று மொழிகளிலும் பாடம் நடத்துகின்றார்கள்.
சிங்களவர்களுக்குச் சிங்களம், தமிழர்களுக்குத் தமிழ், பறங்கியவர்களுக்கு ஆங்கிலம். பெரதேனியா பல்கலைக்கழக உபவேந்தரை நான் இப்படிக்கேட்டேன்; மும்மொழியில் பயிற்றப்பட்ட பெருந்தெருப் பொறியியலாளர்கள் இணைந்து எப்படி ஒரு மேம்பாலத்தைக் கட்டி முடிப்பார்கள்? அந்த உபவேந்தர் ஒரு பறங்கி இனத்தவர். தான் கேம்பிறிஜ் பல்கலைக்கழகம் சென்று கலாநிதிப்பட்டம் பெற்றதற்கு அத்தாட்சியாகக் கழுத்துப்பட்டி அணிந்திருந்தார்.
'ஐயா, நீங்கள் கேட்டது ஒரு அரசியல் கேள்வி, அதற்கு அமைச்சர்கள்தான் பதில் கூற வேண்டும்' என்று அவர் எனக்குப் பதிலளித்தார். நான் பாடப்புத்தகங்கள் பற்றியும் கேட்டேன். ஆங்கிலப் பாடநூல்கள் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பிரசுரமாகும்போது காலதாமத மாகிவிடும். இதனால் தமிழ், சிங்களப் பாடநூல்களில் பல குறைபாடுகள் தோன்றும். ஆங்கில நூல்கள் புதிதாகத் தோன்றும் வேகத்திற்கு ஈடாக மொழிமாற்ற நூல்கள் தோன்றும் வாய்ப் புக்கள் இல்லை. இதனால் கல்வி திருப்திகரமாக அமையாது. இவ வாறு கூறிய என்னை அவர் மறுத்துரைக்கவில்லை.
தேயிலைத் தோட்டங்களும் படுமோசமான நிலையில் இருந்தன. பிரிட்டிசார் மேற்பார்வை செய்வதற்கும், உள்@ர் வாசிகள் மேற்பார்வை செய்வதற்கும் இடையில் நிறைய வித்தியாசம். உள்@ர் மேற்பார்வையாளர்கள் திறமை போதாதவர்கள். இறுக்கமான மேற்பார்வையும் கட்டுப்பாடும் இல்லாத குறையால் முற்றிய இலைகளும் பறிக்கப்படுகின்றன. இதனால் சிலோன் தேயிலையின் தரம் கெடுகின்றது.
அவர்களுடைய தென்னந்தோட்டங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது. நிர்வாகம் செய்து பழக விலை கொடுக்கவேண்டும். கொடுக்கும் விலை பயன்தரவேண்டும். வீண்விரயமாக அமையும் போது நிர்வாகம் பாழ்படும்.
நான் பல வருடங்களாக சிலோன் வரும் சந் தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது சிறீலங் கா என்று அழைக்கப்படும் இந்த நாட்டின் புதிய பிரதமரை சிட்னி நகரில் நடைபெற்ற பிரிட்டிஸ் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் சந்தித் தேன். புதிய பிரதமரின் பெயர் ஜுனியஸ் றிச்சாட் ஜெயவர்த்தனா. அவருக்கு முந்திய பிரதமர் திருமதி.பண்டாரநாயக்கா, நாட்டின் பெயர் மாற்றத்தைச் செய்ததோடு நாட்டை குடியரசாகவும் மாற்றியிருந்தார். இதனால் ஏதேனும் நன்மை கிடைத்ததாக எனக்குத் தெரியவில்லை. இப்போதும் இந்தநாட்டின் தேயிலை 'சிலோன் தேயிலை' என்றுதான் அழைக்கப்படுகின்றது.
சொலமன் வெஸ்ற்றிஜ்வே பண்டாரநாயக் காவைப் போல் ஜெயவர்த்தனாவும் கிறீஸ்தவ ராகப் பிறந்து புத்த மதத்திற்கு மாறியவர். பண்டாரநாயக்காவைப் போன்று இவரும் மக் கள் தலைமையைப் பெறுவதற்காக சுதேசி வேடம் தரித்தவர். தனது எழுபது வருட வாழ் வில் பல அரசியல் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித் தவர். பார்க்கப்போனால் தாழ்வுகள்தான் கூடிய வை தோல்விகளுக்கு விளக்கம் கற்பிப்பது போல் இவர் தத்துவம் பேசுவார்.
சிறீலங்கா கடைப்பிடித்த பேச்சுவார்த்தை யைக் கைவிடவும் புதிய பாதையைத் திறக் கவும் அவர் விருப்பங்காட்டினார். சோசலிசம் நாட்டைக் குட்டிச்சுவராக்கிவிட்டது என்பது அவருடைய கருத்து, என்னைச் சிட்னியில் சந்தித்தபின் சிங்கப்புூரில் என்னை வந்து சந்தித்தார். சிறீலங்காவின் மேம்பாட்டிற்கு சிங்கப்புூரின் ஒத்துழைப்பை என்னிடம் அவர் வேண்டினார்.
அவருடை யோசனைகளின் அனுகூலத்தை நான் மெச்சினேன். இதன் காரணமாக ஏப்ரல் 1978இல் நான் சிறீலங்காவுக்கு ஒரு விஜயம் மேற்கொண்டேன். தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்கப்போவதாக அவர் எனக்குச் சென்னார். சிங்களவர்களின் மேலாதிக்கத்தை அவர் தமிழர்களுக்கு விட்டுக்கொடுக்கப் போவதில் லை என்பதை அப்போது நான் உணரவில் லை. இதுதான் 1983ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போருக்கு முக்கிய காரணம். பல வருடங்களுக்கு சிறீலங்காவின் செழிப்பை அது தள்ளிப்போட்டது.
அவருக்குச் சில பலவீனங்கள் இருந்தன. அவர் ஒரு பயணிகள் விமான சேவையை சிறீலங்காவில் ஆரம்பிக்க ஆசைப்பட்டார். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்த நாட்டின் பயணிகள் விமானசேவை அடையாளமாக அமையும் என்பது அவருடைய எண்ணம். அண்மையில் வெளிவந்த 'போச்சூன்' சஞ்சி கை இதழின்படி உலகின் தலைசிறந்த விமான சேவை என்ற சிறப்பு விருதை சிங்கப்புூர் விமான சேவை பெறுகின்றது.
சிங்கப்புூர் விமானசேவையில் ஒரு சிறீலங் கா தமிழர், கப்டன்தர விமான ஓட்டியாகப் பதவி வகித்தார். இவரைத் தனக்குத் தந்துதவுமாறு ஜெயவர்த்தனா வேண்டினார். நான் அதற்கு ஒத்துக்கொண்டேன்.ஆனால்,விமான ஓட்டியால் எப்படி ஒரு விமானசேவையை உருவாக்கி நடத்தமுடியும்? எனினும் சிறீலங்காவுக்கு உதவ நாம் தயாரானோம். விமானசேவையைத் தொடங்கி நடத்துவதுதான் சிறீலங்காவின் முக்கிய மேம்பாட்டுத் திட்டமாக எண்ணக் கூடாது என்று நான் அவருக்கு வலியுறுத்தி னேன்.
விமானசேவைக்கு ஒதுக்கப்படும் நிதியை விவசாயம், நீர்ப்பாசனம், வீடமைப்பு, தொழிற் பெருக்கம் இத்தியாதிகளுக்கு நல்ல எதிர்பார்ப் புக்களோடு செலவிடலாம் என்று நான் அவருக்குச் சொன்னேன். விமானசேவை ஒரு கவர்ச்சியான திட்டம். அதனுடைய வருவாய் நிட்சயம் இல்லை. நிர்வாகத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். சிறீலங்கா வின் மேம்பாடு விமானசேவையைத் தொடங்கு வதால் கிடைக்கப்போவதில்லை. இதையெல் லாம் அவர் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.
சிறீலங்கா விமானசேவையைத் தொடங்கு வதற்கு வேண்டிய உதவிகளை நாம் வழங்கி னோம். இரு மாதம் தொடக்கம் இரு வருடம் வரையிலான சேவைக் காலத்திற்கு நாம் எண்பது சிங்கப்புூர் விமானசேவைப் பணி யாளர்களைக் கொடுத்துதவினோம். உலக ளாவிய எமது விற்பனை முகவர்கள் சிறீலங் காவுக்கு உதவினார்கள். வெளிநாடுகளில் அலுவலகங்கள் திறப்பதற்கும் நாம் உதவி னோம். பணியளர்களுக்கு பயிற்சி வழங்கும் பயிற்சி நிலையங்களைத் திறப்பதற்கும் நம் மால் இயன்றளவு செய்தோம்.
அதியுயர் மட்டத்தில் நிர்வாகக் கட்டமைப்பு சரியாக அமையவில்லை. நான் கொடுத்த விமானமோட்டி இப்போது சிறீலங்கா விமான சேவையின் தலைவராகிவிட்டார். எமது ஆலோ சனைக்கு முரணாக அவர் இரு பழைய விமானங்களை வாங்குவதற்கு தீர்மானித்தார். அத்தோடு, நாங்கள் வெளியேறத் தீர்மானித் தோம். திடீர் விரிவாக்கம், வருவாய் வறட்சி, நன்கு பயிற்றப்பட்ட பணியாளர் தட்டுப்பாடு, நம்பிக்கையற்ற பறப்பு நேர அட்டவணை, பயணிகள் ஆதரவின்மை என்ற ஐந்து காரணங் களுக்காக சிறீலங்கா விமானசேவை தோல்வி யைச் சந்தித்தது.
சிங்கப்புூரைப் போன்ற நாடாகவேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்த நேர காலத்தில் சிறீலங்கா திட்டமிட்டது. இது எமக்குப்பெரு மையைத் தந்தது. சிங்கப்புூரின் வீட்டுத்திட்டம் போன்றதொன்றை (1982) இல் ஆரம்பித் தார்கள். ஆனால், அதற்கு நிதி ஒதுக்கீடு போதாது, சிங்கப்புூர் நிலப்பரப்பிலும் பார்க்க சற்றுச் சிறிய பிரதேசத்தில் ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தைத் திறந்தார்கள். தமிழ்ப் புலிகளின் நடவடிக்கைகளால் முதலீட்டாளர் கள் விரட்டப்பட்டனர். அதன் காரணமாக சுதந் திர வர்த்தக வலயம் மேலெழும்ப மறுத்தது.
காணிப் பங்கீட்டில்தான் ஜெயவர்த்தனா தனது மிகப்பெரிய தவறைவிட்டார். சிறீலங் காவின் வறண்ட பிரதேசங்களில் வெளிநாட்டு உதவியுடன் அவர் காணி நிலங்களை மீட் டெடுத்தார். பழைய நீர்ப்பாசனத் திட்டங் களைப் புதுப்பித்தார். மலைநாட்டிலிருந்து வரும் நதி நீரைச் சேமிக்கும் குளங்களைத் திருத்தினார். ஆனால், இப்பிரதேசத்தில் நெடு நாட்களாக வாழ்ந்த தமிழர்களை ஓரங்கட்டிய படி சிங்கள இனத்தவர்களுக்கு மாத்திரம் மீட்டெடுத்த நிலத்தை பங்கிட்டு வழங்கினார்.
பாரம்பரிய நிலத்தை இழந்த தமிழர்கள் தமது முழு ஆதரவை தமிழ்ப் புலிகளுக்கு வழங்கினர் ஜெயவர்த்தனாவின் அந்தரங்கச் செயலாளரான ஒரு யாழ்ப்பாணத் தமிழரை ஒருமுறை சந்தித்தேன். காணிப் பங்கீடு மிகவும் பாரதூரமான தவறு என்று ஜெயவர்த் தனாவுக்கு விசுவாசமான இந்த மனிதர் எனக் குக் கூறினார். தொடர்ந்து நடைபெறும் போரில் 50,000 வரையிலானோர் கொல்லப்பட்டுள்ள னர். பதினைந்து வருடம் சென்றபின்பும் போர் ஓய்வதாகத்தெரியவில்லை.
மிகவும் களைத்துப்போன நிலையில் ஜெய வர்த்தனா 1988இல் தானாகவே பதவி விலகி னார். இவருடைய இடத்திற்கு வந்த றணசிங்க பிரேமதாசா ஒரு சிங்களப் பேரினவாதி. இவர் இந்தியத் துருப்புக்களை வெளியேறும்படி பணித்தார். அது அவ வளவு புத்திசாலித்தன மானதல்ல. சிறீலங்காவுக்காக அவர்கள் மிகவும் கேவலமானதொரு வேலையைச் செய்துகொண்டிருந்தனர். இந்தியத் துருப்புக் கள் வெளியேறியபின் அவருடைய நிலை மோசமடைந்தது. அவர் தமிழ்ப் புலிகளுடன் நடாத்திய சமரசப் பேச்சுக்கள் தோல்வி கண்டன. அவரும் மிகவும் குறைந்தளவு உரி மைகளையே கொடுக்கத் தயாராக இருந்தார். அவர் சிங்கப்புூருக்கு வரும்போது பலமுறை சந்தித்துள்ளேன். போர், சிறீலங்காவின் பிணக் கை முடிவுக்குக்கொண்டுவராது என்று பிரேம தாசாவுடன் வாதிட்டேன். அரசியல் தீர்வு ஒன்று தான் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு திருப்தி யளிக்கும் என்று அவரிடம் சொன்னேன். தன் னாட்சி கோரிப் போரிட்ட மிதவாத தமிழ்க் கூட்டணிக்கும் முழு உலகிற்கும் நியாயமான அரசியல் தீர்வு ஏற்புடையதாகும் என்றும், அவருக்கு இடித்துரைத்தேன். உங்களுடைய குறிக்கோள் தமிழ் 'பயங்கரவாதிகளுக்கு' தமிழ் மக்கள் அளிக்கும் ஆதரவை இல்லா தொழிப்பதாக இருக்கவேண்டும். இதற்கு தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்குவதே சிறந்த உபாயம் என்று நான் அவருடன் வாதிட்டேன்.
தமிழ்ப்புலிகளைத் தன்னால் அழிக்க முடியும் என்று அவர் முழுமூச்சாக நம்பினார். 1991, 1992இல் பெரும் படையணிகளை அவர் புலி களுக்கு எதிராக அனுப்பினார். அவருக்கு வெற்றிகிடைக்கவில்லை. 1993இல் பெரும் படையணிகளை அவர் புலிகளுக்கு எதிராக அனுப்பினார். அவருக்கு அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. 1993இல் மேதின ஊர்வலத் தில் ஒரு தற்கொடை குண்டுதாரி அவருக்கு முடிவுகட்டினார். இன்னும் பலர் அப்போது இறந்தனர்.



பிரேமதாசாவுக்குப் பின் அதிபர் பதவியைப் பிடித்த சந்திரிகா குமாரதுங்கா பேச்சுவார்த் தையையும் போரையும் அடுத்தடுத்துக் கைக் கொண்டார். யாழ் தீபகற்பத்தை அவர் மீண்டும் கைப்பற்றினார். ஆனால், அவரால் தமிழ்ப் புலிகளை அழிக்கமுடியவில்லை. போர் தொடர் கின்றது. அமைதிக்கும், போதுமென்ற மன நிலைக்கும் 'செறென்டிப்பிற்றி' என்று ஆங்கி லத்தில் சொல்வார்கள். சிலோனின் புராதன காலப் பெயரான 'செறென்டிப்' என்பதில் இருந்து செறென்டிப்பிற்றி பிறந்தது. இத்தனை சிறப்புவாய்ந்த இந்தத் தீவு துன்பத்திற்கும் இடைவிடாத போருக்கும் இருப்பிடமாக இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது

....erimalai...
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
லீ குவான் - by vasisutha - 02-15-2004, 11:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)