04-17-2006, 07:56 PM
வவுனியாவில் கைக் குண்டு வீச்சு: சிறிலங்கா காவல்துறையின் ஒருவர் பலி- இருவர் படுகாயம்
[செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 00:58 ஈழம்] [ம.சேரமான்]
வவுனியாவில் அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய கைக் குண்டுத் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் படுகாயமடைந்தனர்.
வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையின் சோதனைச் சாவடி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இக்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் அனைத்து போக்குவரவுகளையும் முடக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தொலைபேசி சேவைகளையும் அப்பகுதியில் படைத்தரப்பினர் துண்டித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றச் சூழ்நிலை ஏற்பட்டது

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>