02-15-2004, 10:20 PM
kuruvikal Wrote:யுத்த சூழலில் கெட்டுப் போவதற்கு சந்தர்ப்பம் அதிகம்.....
அப்பிடி சொல்ல முடியாது. கெட்டுபோகாதுக்கு சில காரணங்கள் உயிர் உத்தவாதமில்லாத நிலைமைல இந்தமாதி எண்ணங்க குறையும் நல்லா சாப்பிட்டுட்டு பிரைச்சனை இல்லாமல் தினவெடுத்து போய் இருக்கேக்கதான் இந்தமாதி எண்ணங்கள் கூடும். இரண்டாவது கட்டுப்பாடுகள் மூணாவது கடுமையான தண்டனைகள் பயம் நாலாவது சுத்திப்பாத்தா எல்லாரும் தெரிஞ்சவங்கள். பெயர் கெட்டுருமுன்னு பயம். இப்பிடி நிறைய சொல்லலாம்.
ஆனா இடம்பெயர்ந்ததுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்ல தேவையில்லை. அதுவும் வவுனியா காம்பில். கடவுளே .......
kuruvikal Wrote:ஆனால் வழிகாட்டுதலை செவிமடுக்கக் கூடிய தெளிவுடன் மக்கள் இருந்தனர்.....! கட்டாக்காலி மாடுகளை விட பட்டிமாடுகள் சொல் வழி கேட்டும்.....உங்கட கதையப் பாத்தா ஆசிரியர் வந்து படிபிச்சாப் போதும் கட்டுப்பாடு இருக்கக் கூடாது பள்ளிக் கூடம் இருக்கக் கூடாது என்ற மாதிரி இருக்கு.....சந்தர்ப்பங்கள் நல்லவையாக (பெரும்பாலும் ) இருந்தால் சிந்தனையும் நல்லதாக அமையும் அதனால்தான் வீட்டுக்கு ஆசிரியரை அனுப்பாமல் பள்ளிக் கூடம் அமைத்து படிப்பிக்கிறார்கள்....ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் சொல்லிக் கொடுக்கிரார்கள்...வீட்டில் படம் வைத்துச் சாமி கும்பிடுவதற்கும்....கோவிலில் போய் கும்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தால்.....மீதமெல்லாம் விளங்கும் விளங்காட்டி எது எமது குற்றமல்ல....!
மாடுகளுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் கிடையாதா? மனுசங்களுக்கு சொல்லி குடுத்து புரிய வைக்கணும். கட்டுப்பாடே வேணாமுன்னு சொல்லலை ஆனா கட்டுப்பாடு இருந்தா மட்டும்தான் நல்லவனாயிருக்கிறவன் வேணாம். அவன் வேறை இடத்துக்கு போனா ரொம்ப கெட்டவனா மாறிடுவான்.
kuruvikal Wrote:(f)பிகர் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை...ஆனால் சிலருக்கும் புரியும் மொழியாக அதுவே இருப்பதால் அதையே நாமும் பயன்படுத்த வேண்டியுள்ளது....உங்க பொஸ் போல...!
இலங்கை தமிழங்க பொதுவா சரக்கு அப்பிடின்னு தான் சொல்லுவாங்க. பிகர் இந்திய தமிழங்க யூஸ் பண்ணுறது. எதுவோ எனக்காக தான் அப்பிடி சொன்னேன்னு சொல்றீங்க. நல்லது.
உங்களுக்கு சடையல் இல்லைன்னா சமாளிப்பிகேசன் அப்பிடின்னா என்னனு தெரியுமா? இல்லை சும்மாதான் கேட்டன் பொஸ்

