02-15-2004, 09:10 PM
kuruvikal Wrote:வழிபற்றி நடக்கத்தெரிந்தவன் வழிகாட்டியை தெளிவாக இனங்கண்டு கொள்வான்.....மனித வாழ்வின் காலம் ஒன்றும் மாறவில்லை...காலம் மாறிவிட்டதாக எண்ணங்கள் கொள்ளப்பட்டு வழிகாட்டிகளைவிட நாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்ற அபரிமித அநியாய சிந்தனைகள் தான் இன்றைய இளையவர் தறிகெட்டுப் போகக் காரணம்......!
அப்பிடி சொல்லமுடியாது. பசங்க சரியா வழிகாட்டப்படவில்லை. நாம என்ன தப்பு பண்ணும் போது கெட்டுப்போயிட்டான் அப்பிடின்னு கத்தினா மட்டும் போதாது. திருப்பி சரியான வழியில நடத்தணும்.
kuruvikal Wrote:அன்றும் இன்றும் நல்லதும் கெட்டதும் என்பது மாறாத ஒன்றுதான்...ஆனால் இன்று அவற்றை சரியான இனங்காண முடியாதபடி சிந்தனைகள் குழம்பிக் கிடக்கின்றன....இதற்கு நல்ல உதாரணம் அன்று தோன்றிய விவேகானந்தர் ஏன் இந்தக் காலத்தில் தோன்றவில்லை......! அன்றைய விவேகானந்தரை தெளிவாக சிந்திக்க வழிகாட்டியவர் இராமகிருஷ்ணர் என்றால் அவருடைய சிந்தனைகளில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து உள்வாங்கக் கூடிய தெளிவும் நிதானமும் விவேகானந்தரிடம் இருந்தது... இன்று அது எத்தனை இளைஞர்களிடம் இருக்கிறது...??? அவர்கள் கேட்கும் கேள்விகளே எந்த அடிப்படை இல்லாமல் இருக்கும் போது எப்படி சிந்தனைகள் தெளிவு பெறும்.....???! குறிப்பாக சொல்லப்போனால் இன்றைய இளைஞர்களிடம் நிதானமாக ஆராய்ந்து சிந்திக்கும் போக்குக் அருகிவருகிறது....இன்றைய இளைஞர் ஒருவர் அப்படி ஒரு இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் எப்படிக் கேட்பார் தெரியுமே...சாமி எனக்கு கலரும் (f) பிரகருமா ஒரு வாழ்க்கை வேணும் அது முடியாதபடி இருக்க ஏதாவது வழிகாட்டுங்களேன்......????! இப்படித்தான் இருக்கும்.....!
எல்லாம் சரியாக நடக்கும்போது எதுக்கு விவேகானந்தர் சாமி? தேவையில்லையே? இப்பதான் முக்கியமா தேவை. இப்ப நீங்க என்னதான் சொல்றீங்க? நாம கெட்டுப்போயிட்டோம். இராமகிருஷ்ணர் வந்தாலும் பிகரை பத்தி தான் கேட்போம். அதனால திருத்த முடியாது அழிஞ்சு போங்க அப்பிடின்னு சொல்றீங்களா?
kuruvikal Wrote:நாம் மனிதன் தனக்கே உரிய உயர் பண்புகளை வெளிப்படுத்தி வாழும் வாழ்வையே காண வேண்டுகிறோம்...அது ஏற்கனவே குறிப்பிட்ட அளவு வகுக்கப்பட்டிருந்தாலும் அவை சிறுகாமல் விருவாக்கப்பட வேண்டுமே தவிர சிதைய இடமளிக்கக் கூடாது.....இளைஞர்களாக இருந்தும் எம்மையும் சிறிது மனிதப் பண்புகளுடன் வாழ வைக்க முனைந்தது என்றால் அது எமது பூமியில் யுத்த சூழலே என்றால் அது மிகையல்ல......!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யுத்த சூழல்ல சமுதாய சீர்கேடு குறைவு இல்லைன்னு சொல்லலை. அப்பிடியே அவங்க கட்டுப்பாடு இல்லாம இருக்கும்போதும் தப்ப்ய் செய்யாம கத்துக்குடுக்கணும். அது தான் உண்மையான சீர்திருத்தம். அந்த இடத்தில் இருந்து வெளிநாடு போனதுக்கப்புறம் கெட்டுபோகிறானே அவன் நல்லவன் கிடையாது.
நல்லவங்கள்ல இரண்டு வகை இருக்கு. ஒண்ணு சந்தர்ப்பம் கிடைக்காதவன். அவன் நல்லவனா இருக்கிறது சந்தர்ப்பம் கிடைகும் வரைக்கும் தான். மத்தவன் சந்தர்ப்பம் கிடைச்சும் கெடாம இருக்கிறவன். அவன் தான் நமக்கு வேணும்.
இப்ப உங்களை பாருங்க. நல்ல பண்போடு அங்க இருந்தீங்கன்னு சொல்றீங்க இப்ப வெளிநாடு போய் பிகர் அப்பிடின்னு பொண்ணுங்களை சொல்றீங்க. நா பேசுற அதேமாதிதானே நீங்க அங்க போய் பேசுறீங்க?
இதுக்கு நா என்ன சொல்லுறது சாமி???


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->