Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.
#4
<b>எம்.பி.பதவி ராஜினாமா: ஜெயலலிதாவுடன் சரத்குமார்- ராதிகா `திடீர்' சந்திப்பு: அ.தி.மு.க.வில் சேர்ந்தனர் </b>
<img src='http://www.viduppu.com/news/data/upimages/17sarathkumar.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:blue'><i>சரத்குமார் - ஜெயலலிதா - ராதிகா</i>

டெல்லி மேல்-சபை எம்.பி.யும், நடிகருமான சரத்குமார் கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அதன் பின்பு சரத்குமார் கட்சியில் ஓரம் கட்டப்படுவதாக புகார்கள் எழுந்தது. அவரது ரசிகர்களும் தங்களுக்கு கட்சியில் உரிய மரியாதை தரப்படவில்லை என்று வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் சரத்குமார் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது என்று அவரது ரசிகர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். ரசிகர் மன்றத்தினர் எடுத்த முடிவு தி.மு.க.வினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு சரத்குமார் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சரத்குமார் திடீரென ராஜினாமா செய்தார்.

இதுபற்றி அவர் கருணாநிதிக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், `கட்சியில் தங்களை சார்ந்த சிலரே எங்களை அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அதனை தங்களுக்காகவும், இயக்கத்திற்காகவும், என் மனைவி ராதிகாவுக்காகவும் சில காலம் தாங்கி கொண்டேன்.

தங்களது இயக்கத்தில் தற்போது வாய் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள். எனவே நான் இந்த இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன்' என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சரத்குமாரின் முடிவுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தென்மாவட்டங்களில் பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி வாழ்த்தினர். மேலும் தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்ட சரத்குமார் நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், இன்னும் சிலர் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர்.

இதனால் சரத்குமார் அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்ற பரபரப்பு அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியது.

இந்த நிலையில் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் திடீரென சிங்கப்பூர் சென்றனர். அங்கு ராதிகா நடத்தி வந்த ராடன் டி.வி. அலுவலக தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அவர்கள் இன்று காலை சென்னை திரும்பினார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதாக அவரது ரசிகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தென்மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கார், வேன்களில் இன்று காலையிலேயே மதுரை விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.

அவர்கள் `சுப்ரீம் ஸ்டார் வாழ்க.. அண்ணன் நாட்டாமை வாழ்க...' என்று வாழ்த்து கோஷம் எழுப்பியபடி விமான நிலையத்தை சுற்றி சுற்றி வந்தனர்.

காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வரும் விமானம் வந்தது. அது மதுரை மண்ணை தொட்டதும் ரசிகர்களின் வாழ்த்து கோஷம் விண்ணை எட்டியது. அப்போது சரத்குமாரும், ராதிகாவும் விமானத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை ரசிகர்கள் தயாராக இருந்த காரில் ஏற்றி மதுரை சங்கம் ஓட்டலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

சங்கம் ஓட்டலுக்கு வந்ததும் மன்ற நிர்வாகிகளுடன் சரத்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். அரை மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. அதன் பின்பு சரத்குமாரும், ராதிகாவும் `பச்சை நிற உடை' அணிந்தபடி வெளியே வந்தனர்.

அப்போது ஓட்டலுக்குள் இருந்த நிருபர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ரசிகர் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும், அ.தி.மு.க.வில் சேரப் போகிறீர்களா? என்றும் கேட்டனர்.

அதற்கு சரத்குமார், `தேனியில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவை சந்திக்க செல்கிறேன். சந்திப்பு முடிந்த பின்பு உங்களை சந்திப்பேன்' என்று கூறி விட்டு விறுவிறு வென வெளியே வந்தார். அவருடன் ராதிகாவும் சென்றார்.

இருவரும் அங்கிருந்து ஒரு தனி காரில் தேனி நோக்கி புறப்பட்டனர். காரை சரத்குமாரே ஓட்டி சென்றார். அவரது கார் வெளியே சென்றதும் ரசிகர்களும் தாங்கள் வந்த வேன், கார்களில் ஏறி அவரை பின் தொடர்ந்தபடி சென்றனர்.

1.20 மணிக்கு அவர்கள்ப தேனி சென்றடைந்தனர். தேனி என்.ஆர்.டி. நகரில் தங்கி உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவர்கள் சந்தித்தனர். அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சரத்குமாரும், ராதிகாவும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். பிறகு மூவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே டெல்லி மேல்சபை எம்.பி. பதவியை சரத்குமார் ராஜினாமா செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்தார்.

எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ள நடிகர் சரத்குமார் அதை கடிதம் வாயிலாக கருணாநிதிக்கு தெரிவித்துள்ளார்.</span>

maalaimalar.com & Viduppu.com
Reply


Messages In This Thread
[No subject] - by Subiththiran - 04-17-2006, 12:52 PM
[No subject] - by Mathuran - 04-17-2006, 01:06 PM
[No subject] - by AJeevan - 04-17-2006, 01:15 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 01:31 PM
[No subject] - by Thala - 04-17-2006, 01:55 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 01:57 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:04 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:06 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:10 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:13 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:16 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:19 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:24 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 02:43 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:46 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:49 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 02:49 PM
[No subject] - by Thala - 04-17-2006, 02:50 PM
[No subject] - by Subiththiran - 04-17-2006, 02:53 PM
[No subject] - by Thala - 04-17-2006, 03:00 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 03:02 PM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 03:27 PM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 03:31 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 03:31 PM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 03:35 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 03:37 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 03:38 PM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 03:40 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 03:42 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 03:44 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 03:44 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 03:47 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 03:48 PM
[No subject] - by அகிலன் - 04-17-2006, 04:08 PM
[No subject] - by tamilini - 04-17-2006, 07:07 PM
[No subject] - by நேசன் - 04-17-2006, 09:30 PM
[No subject] - by Subiththiran - 04-17-2006, 10:48 PM
[No subject] - by கந்தப்பு - 04-18-2006, 12:09 AM
[No subject] - by தூயா - 04-18-2006, 12:37 AM
[No subject] - by கந்தப்பு - 04-18-2006, 12:39 AM
[No subject] - by தூயா - 04-18-2006, 12:47 AM
[No subject] - by கந்தப்பு - 04-18-2006, 01:01 AM
[No subject] - by Vasampu - 04-18-2006, 01:10 AM
[No subject] - by paandiyan - 04-18-2006, 01:45 AM
[No subject] - by தூயவன் - 04-18-2006, 04:29 AM
[No subject] - by தூயவன் - 04-18-2006, 04:31 AM
[No subject] - by தூயவன் - 04-18-2006, 04:33 AM
[No subject] - by Vasampu - 04-18-2006, 12:41 PM
[No subject] - by Vasampu - 04-18-2006, 02:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)