04-17-2006, 01:09 PM
<b>தென்மராட்சியில் மேலும் ஒரு வர்த்தகர் சுட்டுக்கொலை</b>
யாழ்ப்பாணம் தென்மராட்சியில் இராமலிங்கம் சகிலன் (வயது 30) என்ற வர்த்தகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மீசாலை ஏ- 9 வீதியில் புத்தூர் சந்தியில் தனது மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இராமலிங்கம் சகிலன் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு ஆயுததாரிகள் அவரது கடைக்குள் அத்துமீறீ நுழைந்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
துப்பாகிச் சூட்டை நடத்தியவர்கள் இராணுவச் சீருடை அணிந்திருந்துள்ளனர். இச்சம்பவம் நடந்த போது கடைக்கு வெளியே 15-க்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் நின்று பொதுமக்கள் நடமாட்டத்தைத் தடுத்துக் கொண்டிருந்தனர்.
சிறிலங்கா இராணுவத்தினரே தன் மகனை சுட்டுக்கொன்றதாக சம்பவத்தின் போது கடையில் இருந்த சகிலனின் தந்தையார் இராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
சகிலனின் உடல் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கிளைமோர்த் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் யாழ். தென்மராட்சியில் தொடர்ந்து வர்த்தகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
தகவல்:புதினம்
ஒட்டுப்படைகள் இப்போது வர்த்தகளை படுகேவலமாகக் கொலை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அப்பாவி வர்த்தகன் கொல்லப்பட்டிருக்கின்றான்

[size=14] ' '